2.26 கோடி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்!  | Albendazole Tablets distributes in schools

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (08/02/2019)

கடைசி தொடர்பு:19:40 (08/02/2019)

2.26 கோடி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்! 

மிழகம் முழுவதும் சுமார் 2.26 கோடி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி, இன்று வெள்ளிக்கிழமை (பிப்.8) தொடங்கியது. தேசிய குடற்புழு நீக்க நாள், ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

மாத்திரைகள்


குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்தச்சோகை, வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்கும்பொருட்டு, நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு,  'அல்பெண்டசோல்' Albendazole எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.

tabletஇந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை தினமாகும். எனவே, மருந்துகளை வழங்க முடியாது என்பதால்,  குடற்புழு நீக்க மாத்திரை அளிக்கும் திட்டம் 8-ம் தேதியே தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, தமிழகத்தில்  அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. அதன்படி,  மாநிலம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இன்று விடுபட்டவர்களுக்கு, அடுத்தகட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி மாத்திரைகள் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.  54, 439 அங்கன்வாடி ஊழியர்களும், 58,358 பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு 97 சதவிகிதம் பேருக்கு  மாத்திரைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.