சென்னையில் தொடங்கியது மருத்துவ ஆய்வகப் பணியாளர்களுக்கான சர்வதேசக் கருத்தரங்கம்! | international conference for medical laboratory technicians started today

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (09/02/2019)

கடைசி தொடர்பு:19:00 (09/02/2019)

சென்னையில் தொடங்கியது மருத்துவ ஆய்வகப் பணியாளர்களுக்கான சர்வதேசக் கருத்தரங்கம்!

ர்வதேச மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் மருத்துவத் தர நிர்வாகிகள் அமைப்பின் தமிழகக் கிளை (ஐக்யூஎம்ஏ - டிஎன்) சார்பில், மருத்துவ ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கான சர்வதேசக் கருத்தரங்கம், சென்னையில் இன்று தொடங்கியது. 

கருத்தரங்கம்

சென்னைப் போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் என  300 பேர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும். கர்நாடகா, மணிப்பூர் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் கருத்தரங்கத்துக்கு வருகை புரிந்துள்ளனர். 

கேள்வி - பதில்

முதல் நாளான இன்று, மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் உபகரணங்களின் தரத்தினை மேம்படுத்துவது குறித்து  மருத்துவர்கள் கருத்துரை வழங்கினர். பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கும் அரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது.  இரண்டு நாள்களாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் நாளை, உடல்நலப் பாதுகாப்பு, நோயாளிகளுக்கான உரிமைகள், தரச்சான்று பெறுவது, நவீன மருத்துவ வளர்ச்சி போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

மருத்துவர்கள்

இதுபற்றி, ஐக்யூஎம்ஏவின் தலைவரும், மேத்தா மருத்துவமனையின் தலைமைச் செயல் இயக்குநர் மற்றும் துணைத் தலைவருமான சமீர் மேத்தா பேசுகையில், '' தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்துறை மருத்துவர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர் கலந்துகொண்டு, மருத்துவ ஆய்வகத் துறையின் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த தகவல்களை, பகிர்ந்து வருகிறோம். நாங்கள் நினைத்தது போலவே  கருத்தரங்கம் அனைவரும் பயன்படத்தக்க வகையில் உள்ளது'' என்றார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க