`ஹெட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கெடுபிடி!' - ஐ.நா. அதிரடி | New Guidelines for Audio devices like headphones

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (15/02/2019)

கடைசி தொடர்பு:21:40 (15/02/2019)

`ஹெட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கெடுபிடி!' - ஐ.நா. அதிரடி

ஸ்மார்ட்போன்களின் வருகை ஹெட்போன்களுக்கான தேவையை அதிகமாக்கி இருக்கின்றன. இதனால் காதில் ஹெட்போன் இல்லாமல் யாரையும் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பணி நிமித்தமாக, பயணத்தில் எனத் தொடங்கிய ஹெட்போன் பயன்பாடு இன்று தூக்கத்திலும் கூட தொடர்கிறது. அதிலும் இளைஞர்கள்தான் அதிக  அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஹெட்போன்

அதிக ஹெட்போன் பயன்பாட்டால் 12 வயது முதல் 35 வயதுவரையுள்ள மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது சுமார் 110 கோடி பேர் கேட்கும் திறனை இழக்க வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் ஆகியவை இணைந்து செல்போன், ஹெட்போன் மற்றும் பிற ஆடியோ கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஹெட்போன் போன்ற ஆடியோ உபகரணங்கள் தயாரிக்கும்  நிறுவனங்கள் அனைத்தும், அதன் தயாரிப்புகளில் அதிக சத்தத்தைக் கண்காணிக்கும் மென்பொருளை இணைக்க வேண்டும். மேலும், குறைவான சத்தத்தில் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பொதுமக்களுக்கு அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

அதிக பயன்பாடு

`ஹெட்போன் பயன்பாட்டால் காது கேட்கும் திறன் குறைந்தால், அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது' என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடலுக்கு ஆரோக்கியமில்லாத ஒரு பழக்கத்தை உத்தரவு போட்டு, கட்டுப்பாடுகள் விதித்துதான் கைவிட வேண்டும் என்பது இல்லை. நாம் மனது வைத்தாலே கைவிட முடியும்.


[X] Close

[X] Close