மனநலம் பாதித்தவர்களுக்கு வண்ண உடைகள் அவசியமா? - நிபுணர்கள் கருத்து என்ன? | imh changes colour mental disorder patient

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (17/02/2019)

கடைசி தொடர்பு:14:38 (17/02/2019)

மனநலம் பாதித்தவர்களுக்கு வண்ண உடைகள் அவசியமா? - நிபுணர்கள் கருத்து என்ன?

'மனநலம்பாதிக்கப்பட்டவர்கள்' என்பதை அடையாளப்படுத்தும்  எதிர்மறையான விஷயங்களுக்கு சீருடை எப்படி சரியாக இருக்கும். சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கிவைக்கும் ஒருவகை தீண்டாமை இது.

மனநலம் பாதித்தவர்களுக்கு வண்ண உடைகள் அவசியமா?  - நிபுணர்கள் கருத்து என்ன?

னநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றதும், அவர்கள் அணிந்திருக்கும் பச்சை நிற உடைதான் நம் நினைவுக்கு வரும். அந்த உடை மீதான பார்வை அனைவரின்  மனதிலும் ஆழமாக வேரூன்றி விட்டது. மருத்துவர், செவிலியர், காவலர், ராணுவ வீரர், ஓட்டுநர் என ஒவ்வொரு துறையினருக்கும் ஒரு பிரத்யேக நிற உடை இருக்கிறது.  ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும்  சீருடைகளால்தான் அடையாளம் காணப்படுகின்றனர். அந்த உடைகள் அவர்களிடமிருந்து பொதுசமூகத்தை விலக்கி  வைக்கவில்லை. ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அணியும் பச்சை நிற உடை, அவர்களை மனநல நோயாளிகள் என்று அடையாளப்படுத்தி, பொது சமூகத்திடம் இருந்து  விலக்கி வைக்கிறது. 

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்

அந்த நிலையை மாற்றும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநலம் காப்பகம் ஒரு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு  விருப்பட்ட உடைகளை அணியலாம் என்பதுதான் அந்த நடவடிக்கை. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மனநல கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தின் இயக்குநர் பூர்ண சந்திரிக்காகாப்பகத்தின் இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம்."மனநல பாதிப்பும் பிற நோய்களைபோல ஒரு வகையான பாதிப்புதான் ஆனால், ஆனால் மனநல நோயாளிகளை மட்டுமே வெறுக்கும் நிலை சமூகத்தில் இருக்கிறது. மனநலப் பிரச்னைகளில் பலவகைகள் உள்ளன. ஆனால் மனநல பாதிப்புள்ளவர்கள் என்றாலே மனச்சிதைவு நோயை  போல, தன்னிலை மறந்து இருப்பார்கள். சாதாரண மனிதர்களுக்கான எந்த உணர்ச்சியும் இருக்காது என்ற எண்ணம்தான் சமூகத்திடம் காணப்படுகிறது. 

மனநல காப்பகங்களிலேயே சிறிய அளவிலான மனநல பாதிப்புள்ளர்வகள், மனநலம் குன்றியவர்கள், பூரண குணமடைந்து குடும்பத்தினரால் அழைத்துச்  செல்லப்படாதவர்கள் என பல நிலைகளிலும் பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். 

மனநலக் காப்பகங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்கள் விருப்பப்பட்ட உடைகளை அணியலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. 'இதையே ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது?' என்று தோன்றியது. ஒரு மருத்துவராகவும், அவர்களுடன் நெருங்கிப் பழகியதன்  மூலமாவும் சாதாரண உடை அணிய வேண்டும் என்ற மனநல நோயாளிகளின் விருப்பங்களையும் உணர்வுகளையும் நேரடியாக உணர்ந்திருக்கிறோம். இந்த முயற்சி   அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும். அதற்கான முதல்படியை எடுத்து வைத்திருக்கிறோம். 

வண்ண உடையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

முதற்கட்டமாக, வழக்கமாக வாங்கும் பச்சை நிற சீருடைக்குப் பதிலாக பல வண்ண ஆடைகளை வாங்கியிருக்கிறோம். அடுத்ததாக, உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்தன்னார்வலர்கள், சேவை  அமைப்புகளிடமிருந்தும் வண்ண ஆடைகளைப் பெறுவதற்கான திட்டமும் இருக்கிறது" என்கிறார். 

சீருடைகள் மாற்றும் நடவடிக்கை மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் உளவியல் ரீதியாக ஏதேனும் மாற்றக்கை ஏற்படுத்துமா? உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்திடம்  பேசினோம்.

"நிச்சயம் இது வரவேற்கத்தக்க நடவடிக்கைதான். வண்ணங்களுக்கு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை இருக்கிறது. வண்ணங்களால் ஒருவரிடம் மன அமைதியையோ, நம்பிக்கையுணர்வையோ ஊட்ட முடியும். பச்சை வண்ணம் மன அமைதியை கொடுக்கக் கூடியது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சை வண்ண உடை  கொடுத்தற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிற உடையே அவர்களைத் தனித்துக்காட்டும் அடையாளமாக மாறிவிட்டது. அதுவே அவர்களை ஒதுக்கி வைக்கவும் காரணமாகிவிட்டது. வண்ண ஆடைகளை பரீட்சாத்த முறையில் முயற்சிசெய்து  பார்ப்பது தவறில்லை. அதோடு மனநல நோயாளிகளின் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்கிறார். 

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

"ஒரு ஒழுங்கிற்காக, நிர்வாக நடைமுறைக்காக, ஒரு துறையை அடையாளப்படுத்த எனப் பல காரணங்களினால் சீருடை அணியும் வழக்கம் இருந்து வருகிறது. துறை  சார்ந்த சீருடைகளை அணிவது அதனை அணிபவருக்குப் பெருமை சேர்க்கக்கூடியதாக இருக்கும். ஆனால், மன நல மருத்துவர் ஆசோகன்'மனநலம்பாதிக்கப்பட்டவர்கள்' என்பதை அடையாளப்படுத்தும்  எதிர்மறையான விஷயங்களுக்குச் சீருடை எப்படி சரியாக இருக்கும். சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கிவைக்கும் ஒருவகை தீண்டாமை இது. ஏற்கெனவே மனதளவில்  அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள அவர்களிடம் இது மேலும் வலியை உருவாக்கும். காப்பகத்துக்குள்ளே இருந்தாலும் அவர்களும் எல்லாரைப் போல இயல்பாக உடையணிவது  தவறில்லை. 

'ஒருவரின் ஆடை சுதந்திரத்தில் பிறர் தலையிடக்கூடாது' என்று பேசுகிறோம். இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் இந்த  நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது." என்கிறார் மூத்த மனநல மருத்துவர் டாக்டர் அசோகன்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் வகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டுக்குரியதே. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close