`செயற்கை குளிர்பானங்களால் பெண்களுக்கு இதயப் பிரச்னைகள் அதிகரிக்கும்!’- ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Post Menopausal Women who Drinks two or more Diet Beverages daily, Increases heart disease

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (19/02/2019)

கடைசி தொடர்பு:17:45 (19/02/2019)

`செயற்கை குளிர்பானங்களால் பெண்களுக்கு இதயப் பிரச்னைகள் அதிகரிக்கும்!’- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தாகம் தணிப்பதற்கு செயற்கை குளிர்பானங்கள் அருந்துவது தற்போது வழக்கமாகிவிட்டது. இதில் ரசாயனச் சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருள்கள், சர்க்கரை போன்றவை அதிகப்படியாகச் சேர்க்கப்படுகின்றன. இவை உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. எனவே இயற்கை பானங்கள் பருகுவதே நல்லது என்கின்றனர் பல ஆய்வாளர்கள். 

ஊட்டச்சத்து பானங்கள்

இந்நிலையில், தினமும் இரண்டுக்கும் மேற்பட்ட செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட ஊட்டச்சத்துப் பானங்களைப் பருகும் பெண்களுக்கு இதயப் பிரச்னைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள இதயநோய் சங்கம் மற்றும் அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோஸியேஷன், சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் 50 முதல் 70 வயதுக்குட்பட்ட 81,700 க்கும் மேற்பட்ட மெனோபாஸ் காலத்தைத் தாண்டிய பெண்கள் உட்படுத்தப்பட்டனர். 

அவர்களிடம் செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட ஊட்டச்சத்து பானங்கள் அருந்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டுக்கும் மேற்பட்ட செயற்கை இனிப்புகள் கலந்த ஊட்டச்சத்து பானங்களை தினமும் பருகி வரும் பெண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் இதய அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 31 சதவிகிதம் அதிகம் உள்ளனவாம். மேலும், முன்கூட்டியே இறப்பு ஏற்படும் வாய்ப்புகள் 16 சதவிகிதமும், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 23 சதவிகிதமும், பொதுவான இதயப் பிரச்னைகளுக்கான வாய்ப்பு 29 சதவிகிதம் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. 

ஊட்டச்சத்து பானங்கள்

 ``செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு மீறிப் பருகுவது, இதயத்துக்குத் தீங்கு விளைவிக்கும். பக்கவாதப் பிரச்னைகளை ஏற்படுத்தும். உடல் பருமனாக இருக்கும் பலரும் தற்போது கலோரி குறைவாக இருக்கும் இத்தகைய குளிர்பானங்களையே பருகிவருகின்றனர். இப்படிப்பட்ட ஊட்டச்சத்து பானங்களை, உடல்நலத்துக்கு நல்லது எனக்கூறி விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என முன்பு ஒருமுறை தேசிய ஆணையம் கூறியிருந்தது. எனவே, மெனோபாஸை கடந்த பெண்கள், இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது" என்கிறார் ஆய்வை நடத்திய ஊட்டச்சத்து நிபுணர் யாஸ்மின்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close