சிகரெட் புகைப்பவர்களுக்கு பார்வை பறிபோகும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!  | cigarette smoking is affects eye sight

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (22/02/2019)

கடைசி தொடர்பு:18:20 (22/02/2019)

சிகரெட் புகைப்பவர்களுக்கு பார்வை பறிபோகும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! 

புகைப் பழக்கம் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. புகை பிடிப்பதால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், புகைப்பழக்கத்தை யாரும் முழுமையாக நிறுத்தவில்லை. இந்நிலையில், தினமும் அதிக அளவில் புகைப்பதால் பார்வை பறிபோகும் ஆபத்து இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

eye

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள ரட்கர் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், புகைப்பழக்கம் உள்ள  25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தினர். சமீபத்தில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், நாள்தோறும் 15 சிகரெட்டுகளைப் புகைக்கும் 71 பேரும்,  20 சிகரெட்டுகளைப் புகைக்கும் 63 பேரும் கலந்துகொண்டனர்.

சிகரெட்

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அவர்கள் சிவப்பு, பச்சை மற்றும் நீலம், மஞ்சள் வண்ணங்களைக் கண்டறிய மிகவும் சிரமப்பட்டனர். காரணம், சிகரெட்டில் இருக்கும் நச்சு ரசாயனங்கள், அவர்களது பார்வை செயல்பாட்டைக் குறைத்திருந்தது. இதன்படி, அளவுக்கு அதிகமாக சிகரெட் புகைப்பவர்களின் கண் நரம்புகள் சேதமடைந்து,  நாளடைவில் பார்வை பறிபோகும் என்பது தெரியவந்தது.

பார்வை

இந்த ஆய்வை மேற்கொண்ட ஸ்டீவன் சில்வர்ஸ்டின் கூறுகையில்,``புகைப்பழக்கத்தால் வழக்கமான ஆரோக்கியச் சீர்கேடுகளைத் தவிர கண்ணில் உள்ள பார்வை நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். தினமும் 20-க்கும் மேற்பட்ட சிகரெட் புகைப்பவர்களுக்கு மூளையின் வெளிப்புறத்தில் புண்கள் உண்டாகும். இதனால் சிந்திக்கும் திறன், செயல்பாடுகளில் குறைபாடு ஏற்படும். அத்துடன், கண் தசைகளின் செயல்பாட்டில் பிரச்னை உண்டாகும்" என்றார்.  


[X] Close

[X] Close