இரத்தப் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் 2 வயது பர்ணா #SaveBarna | Help 2 year old who fights against leukemia

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:39 (22/02/2019)

இரத்தப் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் 2 வயது பர்ணா #SaveBarna

பர்ணாவுக்கு இரண்டு வயது. அவள் வயதுடைய குழந்தைகளைக் காட்டிலும் பர்ணாவுக்கு வலிமை அதிகம்.காரணம் உலகத்திலேயே கொடிய நோயான இரத்தப் புற்றுநோயை எதிர்கொண்டு வருகிறது இந்தக் குழந்தை.

கடந்த ஆறு மாத காலமாக ஒவ்வொரு ஊருக்கும் நகரத்துக்கும் மாறி மாறி தங்களுடைய குழந்தையின் சிகிச்சைக்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர் பர்ணாவின் பெற்றோர். இவர்கள் மேற்கு வங்காளம் கோச் பேகார் பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதிகள் ஆவர். பர்ணாவின் அப்பா சுகுமார் ஒரு கூலித் தொழிலாளி. மாதத்துக்கு சுமார் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் கொண்ட சுகுமாருக்கு தனது ஒரே குழந்தையின் சிகிச்சைக்காக பணம் சேர்க்க ஓடித் திரிவதே தற்போதைய வேலையாகி விட்டது. 

தனக்கு உடலில் ஏற்படும் துயரத்தைத் கூட எடுத்துச் சொல்ல முடியாத சின்னஞ்சிறு மகளை எண்ணி எண்ணி சதா சர்வகாலமும் கண்ணீர் விட்டபடியே இருக்கும் அவரது தாய்க்கு ஒரே மன நிம்மதியாக அமைந்தது 'பர்ணாவை காப்பாற்ற முடியும்' என டாக்டர்கள் கொடுத்த நம்பிக்கை மட்டுமே.

பி செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கேமியா (B cell Acute Lymphoblastic Leukaemia) எனும் குழந்தைகளைத் தாக்கும் இரத்தப் புற்றுநோயின் இக்கட்டான சூழ்நிலையில் பர்ணா இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, உடல் முழுக்க வலியையும், காய்ச்சலையும் ஏற்படுத்தி, பசியில்லாமல் எந்நேரமும் சோர்வுரச் செய்து குழந்தைகளின் உடலையும் உயிரையும் நொடித்துவிடக்கூடியது இந்தக்கொடிய நோய்.

இந்த நரக வேதனையிலிருந்து மீள பர்ணாவுக்கு இப்போது தேவையானது எல்லாம் 'போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் (Bone Marrow Transplant) சிகிச்சை. இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சை மிகவும் சிக்கலானது, மேலும்பர்ணாவை தோராயமாக இரண்டு வருட காலம் தொடர்ந்த சிகிச்சையில் வைத்திருப்பது அவசியமாகும். பர்ணாவின் புற்றுநோய் சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இது இந்தத் தம்பதிகள் கனவிலும் நினைத்திராத மாபெரும் தொகை ஆகும்.

"24 மணி நேரமும் நான் கூலி வேலை பார்த்தாலும் இந்தப் பணத்தை என்னால் சம்பாதிக்க இயலாது ஆனால் அதனால் எங்களின் பர்ணாவின் உயிரைக் காப்பாற்றாமல் விட முடியுமா?", தன்னுடைய வேதனையை வார்த்தைகளால் உதிர்க்கிறார் சுகுமார்.

துரதிஷ்டவசமாக சுகுமாரின் நண்பர்களும் உறவினர்களும் இவ்வளவு பெரிய தொகையை தரும் அளவிற்கு பணம் படைத்தவர்கள் கிடையாது. எனவே தங்களின் அன்புக் குழந்தையை காப்பாற்ற நம்முடைய உதவியை நாடி கையேந்தி நிற்கின்றனர் ஆதரவற்ற இந்தத் தம்பதிகள். நாம் நன்கொடையாக வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் பர்ணாவின் வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடத்தை சேர்க்கக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

பிஞ்சு பர்ணாவின் உயிரை நீங்கள் காப்பாற்ற எண்ணினால் https://www.ketto.org/stories/helpbarna?utm_campaign=helpbarna&utm_medium=position_1&utm_source=external_vikatan - இந்த லிங்கிற்குச் சென்று தங்களாலான பண உதவியைச் செய்யலாம். 

உதவிக் கரம் நீட்டுவோம், பர்மாவைக் காப்பாற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களின் பெற்றோருக்கு வழங்குவோம்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close