மணமாகாத ஒரே பெண்ணைக் காப்பாற்ற தாய் படும் பாடு! #SaveGayathri | Single mother struggling to save her daughter

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:56 (22/02/2019)

மணமாகாத ஒரே பெண்ணைக் காப்பாற்ற தாய் படும் பாடு! #SaveGayathri

தனியார் மருத்துவமனை ஒன்றில் ரிசெப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார் காயத்ரி, வயது 24. அது ஒரு சாதாரண நாள், தினசரி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் காயத்ரி, அப்போது திடீரென தன் மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவதை கவனித்தார். வேலை அதிகம் இருந்ததால் அப்போது அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து மறுநாளும் வேலை செய்து கொண்டிருக்கும்போது மூக்கில் இரத்தம் வழிய மயக்கமுற்றார் காயத்ரி.

அவர் எழுந்து பார்க்கும்போது மருத்துவமனை படுக்கையில் அவருக்கு க்ளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது அவருடைய இரத்தத்தை பரிசோதனை செய்வதற்காக செவிலியர்கள் அங்கும் இங்கும் நடந்த வண்ணம் இருந்தனர். இதைக் கண்ட காயத்ரி நடுக்கமுற்று படுக்கையிலிருந்து விரைவாக எழுந்து தன்னுடைய வேலையை பார்க்கச் செல்ல வேண்டும் என முயன்றார், ஆனால் உடல் அயர்வால் எழ இயலவில்லை.

வேலை நேரத்தில் இப்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பது காயத்ரிக்கு பதட்டத்தையும் பயத்தையும் தந்தது. காரணம், ஒரு நாள் வேலை செய்யவில்லை என்றாலும் அந்தச் சம்பளப் பணம் கிடைக்காமல் போனால் தன் குடும்பம் சிரமப்படும் என்கிற எண்ணம் அவருக்கு. காயத்ரிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை எடுத்துக் கூற அவரது அன்னையை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டது மருத்துவமனை நிர்வாகம். ஏதாவது முக்கியமான பிரச்சினை என்றால்தான் உறவினர்களை வரச் சொல்வார்கள் என்பது காயத்ரிக்கு தெரியும். மருத்துவமனை விரைந்த காயத்ரியின் அம்மா நிர்மலாவிடம், அவருடைய மகளுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியை உறுதிசெய்ய உடனடியாக அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர் மருத்துவர்கள்.

கொடிய நோய், கேள்விக்குறியான வாழ்க்கை!

அமெரிக்கன் ஆன்காலஜி மருத்துவமனையில் காயத்ரிக்கு பலதரப்பட்ட பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டு அவருக்கு புற்றுநோய் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சற்று மன தைரியம் கொண்டிருந்த அம்மாவுக்கும் பெண்ணுக்கும் அப்போது தெரியாது இதைவிட கொடூரமான ஒரு செய்தி காத்திருக்கிறது என்பது.

பரிசோதனையில் காயத்ரிக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி அரியவகை நோயான 'ஏபிளாஸ்டிக் அனீமியா (Aplastic Anemia)' என்பது தெரியவந்தது. எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் கோளாறு காரணமாக வரக்கூடிய இந்த வியாதி, உடம்பில் சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் உற்பத்தியாவதை தடுக்கிறது. ஏபிளாஸ்டிக் அனீமியா நோயை குணப்படுத்த ஒரே வழி எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையாகும். இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ள காயத்ரிக்கு கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. சிகிச்சைக்கான செலவைக் கேட்ட மாத்திரத்திலேயே தான் இறந்து விடுவோம் என்கிற அவநம்பிக்கையை அடைந்தார் காயத்ரி.

கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த பெண்...

நன்றாக படித்து வந்த காயத்ரி குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவருடைய தந்தையும் அப்பெண்டிக்ஸ் நோயால் காலமானார். தற்போது அவரது அன்னை நிர்மலா மட்டும்தான் அவரது உலகம். தான் வேலைக்கு செல்லாமல் விட்டுவிட்டால் தன்னுடைய அன்னையை யார் பார்த்துக்கொள்வார் என்கிற மன வேதனையில் செய்வதறியாது திகைத்து கிடக்கிறார் காயத்ரி.

காயத்ரியும் நிர்மலாவும் வேலை பார்த்துத்தான் தங்களுடைய வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். தற்போது காயத்ரிக்கு ஏற்பட்டிருக்கும் நோய் காரணமாக அவர் வேலையை விட்டுவிட்டார். இதனால் மகளைக்காப்பாற்றக் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து மகளுக்கு சிகிச்சை செய்துவருகிறார் நிர்மலா. 

மகளுக்கு விரைவிலேயே திருமணம் செய்து அழகு பார்க்க நினைத்த நிர்மலா, அவள் உயிர் பிழைத்தால் போதும் என அல்லும் பகலும் மருத்துவ செலவுக்காக உழைத்து வருகிறார். ஆனால், டெய்லர் வேலை பார்க்கும் நிர்மலாவால் இவ்வளவு பெரிய தொகையை சேர்ப்பது கனவிலும் முடியாத காரியமாகும். ஒவ்வொரு முறை தூங்காத விழிகளுடன் அயர்ந்துபோய் தன்னைப் பார்த்துக்கொள்ள மருத்துவமனைக்கு வரும் தன்னுடைய அம்மாவை நினைத்து நினைத்து தன்னுடைய கையறு நிலையால் துடித்து வருகிறார் காயத்ரி. துணையற்ற தன்னுடைய அன்னையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் ஒரே ஆசையாகும்.

இதற்காக அவர் விரைவில் குணமடைந்து வர நம்முடைய உதவி கண்டிப்பாக தேவைப்படுகிறது. காயத்ரியின் சிகிச்சைக்கு நம்மாலான பண உதவியை https://www.ketto.org/stories/helpgayathri?utm_campaign=helpgayathri&utm_medium=position_1&utm_source=external_vikatan - இந்த லிங்கிற்கு சென்று செய்யலாம். உதவி செய்வோம், காயத்ரி மற்றும் நிர்மலாவின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.


பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close