தேர்வு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் - ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகள்! | Choice of foods during exams

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (24/02/2019)

கடைசி தொடர்பு:13:40 (24/02/2019)

தேர்வு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் - ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகள்!

தேர்வு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் - ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகள்!

தேர்வுக் காலம்... மாணவர்களின் உடலும் மனமும் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டிய காலம். தேர்வுக் காலத்தில் ஏற்படும் பயம் காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். தேர்வு நேரத்தில் உட்கொள்ளும் உணவினால் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு அது தேர்வின்போது மாணவர்களின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும். இதனால் பல மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட  உடல் உபாதைகள் ஏற்படலாம். அவற்றைத் தவிர்க்கத் தேர்வு நேரத்தில், மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அளிக்கும் திட்டமிட்ட உணவுமுறை அவசியம். 

தேர்வு

தேர்வு நேரத்தில் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள் எவை எவை என்பனவற்றைப் பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாப்னி.

* பால், புரோக்கோலி போன்ற மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, திராட்சை போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்களைச் சாப்பிட வேண்டும். 

* சிக்கன், ஒமேகா 3 சத்து நிறைந்த மீன் வகைகள், முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய உட்கொள்ளவேண்டும். 

* கோடைக்காலத்தில் சளி, இருமல் போன்ற தொற்று பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கீரை வகைகள், நட்ஸ் வகைகள், தயிர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். 

* ஹெவி ஃபுட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளை முழுமையாகத் தவிர்க்கவும். வறுத்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்கவேண்டும். அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடும் குழந்தைகளுக்கு, வீட்டிலேயே அவற்றைச் சமைத்து தரலாம். 

* ஸ்நாக்ஸ் வகைகளில், நட்ஸ் மற்றும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வரவும். பழச்சாறுகளில், மாதுளை ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி சாறு அருந்தலாம். சாறாகக் குடிப்பதைவிடப் பழங்களாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

தேர்வு

* கோடைக்காலமாக இருப்பதால், உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை. தினமும் மதிய நேரத்தில் இளநீர், நீர்மோர், ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வது நல்லது. எலுமிச்சைச் சாற்றில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும் செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் அது உதவும். எனவே தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது நல்லது. 

* உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும் உணவுகளான வாழைப்பழம், நட்ஸ், முட்டை, மீன், ஆப்பிள், தயிர் போன்றவற்றை படிக்கப்போகும் முன்னரும், பகலில் தூக்கம் வரும்போதும் சாப்பிடுவது நல்லது. 

* தேர்வு நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்ளவும். வயிற்றுப்போக்கு பிரச்னை இருப்பவர்கள், பால் குடிப்பது பிரச்னையை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கவும். நீர்ச்சத்து அதிகரிக்கும் இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம்.

தேர்வு

* ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு லிட்டராவது தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீராக மட்டுமன்றி, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளாகவும் அது இருக்கலாம். தேர்வுக்கு முந்தைய இரவு குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது தூங்கவேண்டும். படிக்கும் நேரத்தை அதற்கேற்றாற்போல் அமைத்துக்கொள்வது அவசியம். இரவில் நிம்மதியாக தூங்க பால் மிகவும் நல்லது.

* உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மனஅழுத்தம் அதிகரிக்கும். அது தலைவலிப் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். இப்படியான நேரங்களில் சாப்பிடாமலேயே தேர்வுக்குச் செல்வது தவறு. அளவுக்கு அதிகமான உணவுகள் எப்படிப் பிரச்னையை ஏற்படுத்துமோ, அப்படித்தான் சாப்பிடாமல் இருப்பதும். பரிட்சை அன்று காலையில் இட்லி, தோசை, ஓட்ஸ், கோதுமை பிரெட், முட்டை சாப்பிடுவது நல்லது. தேர்வு நாளிலோ, முதல்நாள் இரவோ அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளைச் சாப்பிடவேண்டாம்.

* சில பெற்றோர், குழந்தைக்குத் தூக்கம் வருவதுபோல இருந்தால் அதைக் கட்டுப்படுத்த டீ அல்லது காபி கொடுப்பார்கள். ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் டீ, காபி குடிப்பது தவறு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close