மாணவர் தற்கொலைகளைத் தடுக்க தனியார் அமைப்புடன் இணைந்து களமிறங்கிய விஷால்! | Actor Vishal strives to prevent students from suicide

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:13:09 (26/02/2019)

மாணவர் தற்கொலைகளைத் தடுக்க தனியார் அமைப்புடன் இணைந்து களமிறங்கிய விஷால்!

ளவியல் ரீதியான பிரச்னைகளாலும், மனஅழுத்தத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் வகையில் தனியார் அமைப்புடன் நடிகர்  விஷால் கைகோர்த்துள்ளார். 

நடிகர் விஷால்

இன்றைய சூழலில் மனஅழுத்தத்தால் பெரியவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கூடப் பாதிக்கப்படுகின்றனர். பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னைகளாலும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதனைத் தடுக்கும் வகையில் தனியார் அமைப்புடன் சேர்ந்து மனநல பாதிப்புகளுக்கு ஆலோசனை வழங்கும் ஹெல்ப்லைனை தொடங்கிவைத்துள்ளார் விஷால்.

உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.அதில் விஷால் பேசியிருப்பதாவது, 

vishal

``உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை... நடக்க முடியவில்லை... நிற்கக்கூட முடியவில்லை. என்ன முடிவெடுப்பீர்கள்? முதலில் நாம் மருத்துவரை அணுக வேண்டும் என்றுதானே. ஆனால், மனநலப் பிரச்னைக்கு நாம் மருத்துவரைப் பற்றி சிந்திப்பதில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு 1 மணி நேரத்துக்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்கிறது புள்ளிவிவரம். குழந்தைகள், சில காரணங்களால் தங்களின் பிரச்னைகளைப் பெற்றோரிடம் சொல்வதில்லை. அதற்காகத்தான் இந்த அமைப்பு இருக்கிறது. குழந்தைகளின் கவலைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரே நோக்கத்தோடு இது செயல்படுகிறது.

விஷால்

நம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, உதவி தேவைப்படும் எல்லாக் குழந்தைகளுக்கும் நம்மால் உதவ முடியும். மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை உண்டு. சரியான நேரத்தில் உதவுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். ஆகையால், நீங்கள் துன்பத்தில் இருந்தாலோ அல்லது வேறு ஒருவர் துன்பத்தில் இருப்பதை அறிந்தாலோ, கீழ்க்கண்ட இலவச எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்கும்’’ என்கிறார் விஷால். 

1800 419 1828 என்ற இலவச எண்ணை அழைத்து, மனநல பாதிப்புகளுக்கு மாணவர்கள் ஆலோசனையைப் பெறலாம். 


[X] Close

[X] Close