எண்ணெயை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தினால் நடவடிக்கை! - உணவகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை! | recycling oil affect health warns central government

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (26/02/2019)

கடைசி தொடர்பு:19:20 (26/02/2019)

எண்ணெயை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தினால் நடவடிக்கை! - உணவகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

பெரும்பாலானோர் சமையலுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்துகிறார்கள். உணவகங்களில் இது அதிகம் நடக்கிறது. இப்படி எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் உடலுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாதிப்புகள்

ஆனால், பெரும்பாலான உணவகங்கள், இனிப்பகங்களில் இதை யாரும் பின்பற்றுவதில்லை. காரணம், பழைய எண்ணெயை என்ன செய்வது, எப்படி வெளியேற்றுவது என்பது குறித்த முறையான விதிமுறைகள் எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில், ``ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மூன்று முறைக்கு மேல் அதை உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும், ``மார்ச் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்’’ என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது. 

பாதிப்புகள்

``ஒரே எண்ணெயை 3 முறைக்கு மேல் பயன்படுத்துவதால் சமைக்கப்படும் உணவுப் பொருள்களின் ஊட்டச்சத்து தன்மை மாறுகிறது. மூன்று தடவை பயன்படுத்திய எண்ணெய் வெளியேற்றப்பட  வேண்டும். இந்த விதியானது தினமும் 50 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தும் உணவகங்களுக்கு மட்டுமே பொருந்தும். எண்ணெய் மாற்றியது தொடர்பான குறிப்பை உணவகம் நடத்துவோர் ஒரு நோட்டில் எழுதி வைக்க வேண்டும்.

 

பாதிப்புகள்

 

பழைய எண்ணெயுடன் புதிய எண்ணெயைச் சேர்க்கக் கூடாது. இதைச் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பார்கள். இந்தச் சட்டம் மார்ச் 1, 2019 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதை மீறினால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் முதல் திருத்தம் ஒழுங்குமுறை சட்டம்  2017, சட்டப்பிரிவு16(5)-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடுகளில் சமையல் செய்யும்போது 2 முறைக்கு மேல் அதே எண்ணெயைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது அல்ல’’ என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


[X] Close

[X] Close