மரபணு மாற்றம் செய்யப்பட்ட சீன இரட்டையர்கள் சூப்பர்-வுமனாக வாய்ப்பு! - ஆய்வில் தகவல் | Gene Edited Twins are suspected to be Meta humans in Future

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (26/02/2019)

கடைசி தொடர்பு:21:02 (26/02/2019)

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சீன இரட்டையர்கள் சூப்பர்-வுமனாக வாய்ப்பு! - ஆய்வில் தகவல்

நினைவாற்றல் அதிகமாக இருப்பது நல்லதுதான் என்றாலும், அதன் வீரியம் எந்தளவுக்கானதாக இருக்கும் என்பதை இப்போது வரை ஆய்வாளர்களால் கணிக்கமுடியவில்லை.

டந்த வருடம், நவம்பர் மாத இறுதியில் சீனாவைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கருவிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்டது. லுலு மற்றும் நாநா என்ற அந்த இரட்டையர்களுக்குச் செய்யப்பட்ட இந்தச் சிகிச்சை, உலக மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் விவாதத்தை அந்தச் சமயத்தில் ஏற்படுத்தியிருந்தது. 

மரபணு

மருத்துவ உலகில் மிகமுக்கியமான இந்த சிகிச்சையில், ஹெச்.ஐ.வி.யை தடுக்கும் சி.சி.ஆர்.5 என்ற மரபணுதான் மாற்றி அமைக்கப்பட்டது. ஹி ஜியான்குயூ என்ற மருத்துவர்தான் இந்தச் சிகிச்சையை முன்னெடுத்துச் செய்தவர். CRISPR என்ற 'மரபணு மாற்றத்துக்கான கருவி' மூலமாக அவர் இதை மேற்கொண்டார். இந்த சி.சி.ஆர்.5 மரபணு குறித்து மரபணு ஆய்வாளர்கள் சமீபத்தில் ஆய்வொன்றை மேற்கொண்டனர். அதன் முடிவில், அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் மூளை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஞாபக சக்தி மற்றும் நினைவாற்றல் அளவுக்கதிகமாக இருக்கும் எனக் கணிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இரட்டை குழந்தைகள் - ஹெச்.ஐ.வி

நினைவாற்றல் அதிகமாக இருப்பது நல்லதுதான் என்றாலும், அதன் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இப்போது வரை ஆய்வாளர்களால் கணிக்கமுடியவில்லை. உலகின் முதல் மெட்டா-ஹூமண்ஸாக இந்தக் குழந்தைகள் இருப்பார்கள் என்பது, சில அறிவியலாளர்களின் கருத்து. அதாவது, சூப்பர்-வுமனுக்கான சக்திகளோடு இவர்கள் இருக்க நேரிடலாம். இந்த மரபணு மாற்றத்தை மேற்கொண்ட சீன ஆய்வாளர், இந்த மூளை சார்ந்த மாற்றங்கள் குறித்து எதுவும் அறியாமல் இருந்திருக்கிறார். அவரின் நோக்கம் முழுக்க, ஹெச்.ஐ.வி.யைத் தடுக்க வேண்டும் என்பது மட்டும்தான். ஆகவே, இந்த சிகிச்சையை ஆக்கபூர்வமான முறையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர் சீனாவைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள். மேலும், சிகிச்சை முழுக்க முழுக்க, ஜியான்குயூவின் பொறுப்பற்ற செயல் எனச் சாடி உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close