புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆயுள் முழுவதும் இலவச சிகிச்சை! | Private hospital offers life time free treatment for Families of two martyred CRPF soldiers from Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (01/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (01/03/2019)

புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆயுள் முழுவதும் இலவச சிகிச்சை!

புல்வாமா தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆயுள் முழுவதற்கும் இலவச சிகிச்சையை அளிக்க முன்வந்துள்ளது மதுரையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை.

புல்வாமா

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தற்கொலை தாக்குதலில்  40 சி.ஆர்.பி.ஃஎப் வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.சிவசந்திரன் ஆகியோரும் பலியானார்கள். 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பில் இருந்து  உதவிகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் செயல்பட்டு வரும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், அவர்களின் ஆயுள் முழுமைக்கும் இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது.

இலவச சிகிச்சை

இந்த சிகிச்சையைப் பெறுவதற்கான இலவச மருத்துவ அட்டை இரண்டு வீரர்களின் குடும்பத்தினரிடமும் நேரடியாகச் சென்று வழங்கப்பட்டுள்ளது. ``நாட்டுக்காக தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களும் செய்த தியாகத்தை வணங்குகிறோம். வீரர்களின்  குடும்பத்துக்கு எங்களால் முயன்ற சிறிய உதவியைச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். இரண்டு  குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ள இலவச மருத்துவ அட்டையைப் பயன்படுத்தி மருத்துவர் ஆலோசனை,  பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சை என அனைத்தையும் இரு குடும்பத்தினரும் பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்  எஸ்.குருசங்கர்.


[X] Close

[X] Close