`ஆண்டுக்கு நான்கு லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!' - ஆய்வில் தகவல் | A new research about child cancer

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (01/03/2019)

`ஆண்டுக்கு நான்கு லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!' - ஆய்வில் தகவல்

லேன்செட் அமைப்பின் புற்று நோயியல் துறை 200 நாடுகளில் புற்றுநோய் பாதித்த குழந்தைகள் குறித்த ஆய்வொன்றைச் சமீபத்தில் மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், வருடத்துக்கு நான்கு லட்சம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. 

புற்றுநோய்

அவர்களில் இரண்டு லட்சம் குழந்தைகள்தான் புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதாவது, சரிபாதி குழந்தைகளுக்கு மட்டுமே புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. மற்றவர்களுக்கு, புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதும் இல்லை, சிகிச்சை அளிக்கப்படுவதும் இல்லை. நோய் பாதிப்போடு இருப்பது தெரியாமலேயே அந்தக் குழந்தைகள் இறந்து விடுகின்றனர் என அதிரவைக்கிறது அந்த ஆய்வு. 2015-ம் ஆண்டு முதல் செய்யப்பட்ட இந்த ஆய்வில், 2015-ல் மட்டும் தெற்கு ஆசியாவில் 49 சதவிகித குழந்தைகள் பாதிப்பு கண்டறியப்படாமல் இறந்து போயிருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் கண்டறியப்படும் குழந்தைகளிலும், 92 சதவிகிதம் பேர் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

விழிப்பு உணர்வு

ஆய்வாளர்களில் ஒருவரான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வார்ட் இதுகுறித்து பேசும்போது, 

``2015 - 2030-ம் ஆண்டுக்குள், 67 லட்சம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவர் என நாங்கள் கணித்துள்ளோம். இப்போது தெரியவந்துள்ள தகவலின்படி பார்த்தால், அவர்களில் 30 லட்சம் பேர் நோய் கண்டறியப்படாமலேயே இறக்கக்கூடும். ஆகவே, வருங்காலத்தில் மருத்துவச் செயற்பாட்டாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் குழந்தைகள் உடல்நலன் சார்ந்த விஷயங்களில் செயல்பட வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகள்தான் நோய் கண்டறியப்படாமல் இறக்கும் குழந்தைகள் பட்டியலிலும் முன்னிலையில் இருக்கின்றனர். எனவே, அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும்" என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close