ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறும் வசதி - முதல்வர் தொடங்கி வைக்கிறார்! | Dont need to wander for birth and death certificate anymore

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (02/03/2019)

கடைசி தொடர்பு:15:20 (02/03/2019)

ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறும் வசதி - முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

பிறப்பு - இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. ஆன்-லைனிலேயே பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் புதிய வசதி வரும் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இந்த வசதியைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

பிறப்பு

இதுவரையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு, குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள், அந்தப் பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளில் (ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ) பதிவு செய்திருக்க  வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளில் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பிறப்பு பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களை சரிபார்த்து, பதிவு செய்த பதினைந்து நாள்களுக்குள் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தையின் பெயரை ஒரு வருடத்துக்குள் சான்றிதழில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், தற்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சென்று பதிவு செய்வதற்குப் பதிலாக ஆன்லைனிலேயே பதிவு செய்து சான்றிதழ் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

மருத்துவமனை

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இந்த வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைசாமிவருடத்துக்கு 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்கிறது தமிழக சுகாதாரத்துறை.

இந்தப் புதிய வசதி குறித்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் பேசினோம்.,

`` இனிமேல் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்குத்தான் ஆன்லைனில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த பிறப்பு- இறப்பு பற்றிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆன் லைனில் பதிவேற்றப்படும். அதற்குப் பிறகு, அனைவருமே பெற்றுக்கொள்ளமுடியும்'' என்கிறார் குழந்தைசாமி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close