விபத்தில் உறுப்புகளை இழந்தவர்களுக்கு செயற்கை உறுப்புகள் - கோவை அரசு மருத்துவமனையில் புதிய அலகு! | covai gh get limb unit!

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (02/03/2019)

விபத்தில் உறுப்புகளை இழந்தவர்களுக்கு செயற்கை உறுப்புகள் - கோவை அரசு மருத்துவமனையில் புதிய அலகு!

சாலை விபத்து அல்லது பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளால் கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகளை இழப்பவர்கள் அதிகம். விபத்துகளில் சிக்கி உறுப்புகளை இழந்தவர்களுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை கே.கே.நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனையில் செயற்கை உறுப்புகள் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. இவை தவிர  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையிலும் ஒரு சிறிய அலகு செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் தனியாரிடம்தான் அதிக அளவிலான செயற்கை உறுப்புகள் வாங்கப்பட்டு பொருத்தப்படுகின்றன. 

ஏழை மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகளை இலவசமாகப் பெற, மாவட்ட சமூக நலத்துறையில் தேவையான சான்றுகளுடன் பதிவு செய்ய வேண்டும். 

 அவயம்

இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றி அரசிடம் இலவச உறுப்புகளைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், அதைப் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து அலையும் நிலையும் காணப்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை உறுப்புகள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் அலகு விரைவில் நிறுவப்பட உள்ளது. 

`இந்த அலகில் தயாரிக்கப்படும் உறுப்புகள் மற்றும் உபகரணங்களை மருத்துவமனையிலேயே சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பிஸியோதெரபி நிபுணர்கள் பொருத்துவார்கள். செயற்கை உறுப்புகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபருக்கு ரூ.25,000 முதல் ரூ.1.97 லட்சம் வரை அரசு செலுத்துகிறது.

 அவயங்கள்

இதனால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். செயற்கை மூட்டு மற்றும் காலணிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள், கருவிகள் வாங்குவதற்கு தமிழக அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அது செயல்படும்' என கோவை அரசு மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close