நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு முன்கூட்டியே மெனோபாஸ்! - எச்சரிக்கும் ஆய்வு முடிவு | Women who works in night shift for prolonged period suffers with Early menopause

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (04/03/2019)

கடைசி தொடர்பு:21:02 (04/03/2019)

நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு முன்கூட்டியே மெனோபாஸ்! - எச்சரிக்கும் ஆய்வு முடிவு

ரவுப் பணியில் வேலை செய்யும் பெண்களுக்கு, மாதவிடாய் நின்றுபோகும் காலமான 'மெனோபாஸ்', வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே ஏற்பட்டுவிடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால், இதய நோய்கள், எலும்பு தொடர்பான நோய்கள், ஞாபக மறதி போன்ற பாதிப்புகள்  ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

மெனோபாஸ்

கனடாவைச் சேர்ந்த பேராசிரியர்கள்  இணைந்து, இரவுப் பணியாற்றும் 80,000 செவிலியர்கள் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தினார்கள். அந்த ஆய்வின் முடிவில்... தொடர்ந்து 20 மாதங்களாக, மாதத்துக்கு ஒருமுறையாவது இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவிகித  வாய்ப்பிருப்பதாகவும்,  தொடர்ந்து 20 வருடங்களாக மாதத்துக்கு ஒருமுறையாவது இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 73 சதவிகித வாய்ப்பிருப்பதாகவும்  தெரியவந்துள்ளது.  

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரும், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டேவிட், ``45 வயதுக்கு முன்பு மெனோபாஸ் எய்தும் பெண்களில் பெரும்பாலானோர், ஷிஃப்ட் முறையில் வேலை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். ஷிஃப்ட் முறையில் வேலை செய்யும்போது, மனஅழுத்தம், உடல் சோர்வு அதிகம் ஏற்படும். அது மட்டுமன்றி, உடலின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்படும். தூங்கும் நேரம், கண் விழிக்கும் நேரம், பசி எடுக்கும் நேரம் என எதிலும் ஒரு வரையறை இருக்காது. இதனால், ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இது அப்படியே தொடரும் பட்சத்தில், மெனோபாஸ் முன்கூட்டியே  ஏற்பட்டுவிடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள்

மனித இனப்பெருக்கம் (Human Reproduction) தொடர்பாக செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில், இரவில் அதிகம் கண்விழிப்பதால், மனஅழுத்தம் ஏற்பட்டு, அதனால் ஆஸ்ட்ரோஜென் (Oestrogen) எனப்படும் பாலியல் ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கும் என்றும், அதனால் பெண்களுக்கு கருப்பை முட்டை வெளிவருவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை, அடிப்படையாக வைத்து, மன அழுத்தத்தோடு வேலைசெய்யும் பெண்களுக்கும், ஷிஃப்ட் அடிப்படையில் நேர வரைமுறை இல்லாமல் வேலைசெய்யும் பெண்களுக்கும், மெனோபாஸ் முன்கூட்டியே ஏற்பட்டுவிடுகிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close