3 கிலோ எடைகொண்ட முயலின் மார்புப் பகுதியிலிருந்த அரைக் கிலோ கட்டி! - ஆபரேஷன் மூலம் அகற்றம் | 500 gram tumor removed from mumbai rabbit's chest

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (06/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (06/03/2019)

3 கிலோ எடைகொண்ட முயலின் மார்புப் பகுதியிலிருந்த அரைக் கிலோ கட்டி! - ஆபரேஷன் மூலம் அகற்றம்

முயலின் மார்புப் பகுதியில் இருந்த 500 கிராம் எடையுள்ள கட்டி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. 

ஆபரேஷன்

மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டில் செல்லப் பிராணியாக முயல் வளர்த்து வந்தனர். திடீரென அந்த முயலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் ஓடவோ, நடக்கவோ முடியாமல் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த முயலை அந்தேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

surgery

சுமார் 9 வயதுள்ள அந்த முயலை கால்நடை மருத்துவரான டாக்டர் ஜெயகர் என்பவர் பரிசோதித்துப் பார்த்ததில், சிறுநீரகங்கள் மற்றும் ஈரல் நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது. அத்துடன் முயலுக்கு ரத்தப் பரிசோதனையும் செய்யப்பட்டது. கடைசியாக மார்புப் பகுதியில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து அந்த முயலுக்கு ஆபரேஷன் செய்து கட்டியை அகற்ற டாக்டர் ஜெயகர் முடிவெடுத்தார். 

முயலுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அதன் மார்புப் பகுதியில் இருந்த 12 செ.மீ அளவுகொண்ட 500 கிராம் எடை உள்ள கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்தக் கட்டியானது முயலின் எடையில் 17 சதவிகிதமாகும். ஆபரேஷன் முடிந்து 10 நாள்களான  நிலையில் தற்போது அதன் எடை 2.6 கிலோவாகக் குறைந்துள்ளது.  `முயல் இப்போது ஆரோக்கியமாக இருப்பதாக’ டாக்டர் ஜெயகர் தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close