இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு இலவச சிகிச்சை - மத்திய அரசு அறிவிப்பு | Cashless treatment for Second world war veterans

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (08/03/2019)

கடைசி தொடர்பு:20:45 (08/03/2019)

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு இலவச சிகிச்சை - மத்திய அரசு அறிவிப்பு

சுமார் 43,000 பேர் இந்தத் திட்டத்தின் கூடுதலாக பயன்பெறுவார்கள். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான 425 மருத்துவமனைகள், 2,500 தனியார் மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற முடியும்.

முன்னாள் ராணுவவீரர்களுக்கான மருத்துவத் திட்டத்தின் (இ.சி.ஹெச்.எஸ்.) கீழ் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன், எமெர்ஜென்ஸி சர்வீஸ் கமிஷன் அதிகாரிகள் மற்றும் பணிக்காலம் நிறைவடைதற்கு முன்பாகவே ஓய்வு பெற்றவர்கள் ஆகியவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு இலவச சிகிச்சை

இதனால் சுமார் 43,000 பேர் இந்தத் திட்டத்தின் கூடுதலாக பயன்பெறுவார்கள். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான 425 மருத்துவமனைகள், 2,500 தனியார் மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற முடியும்.

மற்றொரு முக்கிய திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போரில் பங்கேற்று உயிர்நீத்த ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் வாரிசுகளுக்கு இ.சி.ஹெச்.எஸ். திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு ஒருமுறை பிரீமியம் செலுத்தும் முறை அமலில் இருந்தது. அந்த முறையை ரத்துசெய்துள்ளனர். அதன் மூலம் போரில் உயிர் நீத்த ராணுவவீரர்களின் குடும்பத்தினர் ரூ.54 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

'மத்திய பாஜக அரசின் கொள்கை முடிவுகளில் இதுவும் ஒரு முக்கியமான மைல்கல்' என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


[X] Close

[X] Close