`2 இதயங்கள் செயலிழப்பு...' 3-வது இதயத்தோடு ஆரோக்கியமாக வாழும் கேரள இளைஞர்! | Kerala person Living with Third Heart celebrates Rebirth

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (12/03/2019)

கடைசி தொடர்பு:19:25 (12/03/2019)

`2 இதயங்கள் செயலிழப்பு...' 3-வது இதயத்தோடு ஆரோக்கியமாக வாழும் கேரள இளைஞர்!

பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கிரீஷ். 38 வயதில் இதயத் தசைகளில் ஏற்பட்ட பாதிப்பு (Cardiomyopathy) காரணமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதயம் மாற்றப்பட்டு எட்டு மாதங்களில் இதயத்தின் வால்வுகளில் மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று தீவிரமடைந்து ஒருகட்டத்தில் கிரீஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சில தினங்கள் வென்டிலேட்டர் உதவியுடனேயே உயிர்வாழ்ந்துள்ளார்.

கேரள இளைஞர் - நடிகர் ஜெயசூர்யா

(Image Courtesy : manorama online)

இந்தசூழலில், ஆலப்புழாவைச் சேர்ந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரின் உறவினர்கள்  இதயத்தை கிரீஷுக்கு தானமாக அளிக்கச் சம்மதம் தெரிவித்தனர். தொடர்ச்சியாக பத்து மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கிரிஷுக்கு மூன்றாவது இதயம் பொருத்தப்பட்டது. பாதிப்படைந்த இரண்டு இதயங்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு, மூன்றாம் இதயத்தின் துணையோடு ஐந்து வருடங்கள் கடந்தும் ஆரோக்கியமாக வாழ்கிறார் கிரீஷ்.

இதயம் கிரீஷ் - ஜெயசூர்யா

(Image Courtesy : Deccan Chronicle)

இதைக் கொண்டாடும்வகையில் எர்ணாகுளத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் மலையாள நடிகர் ஜெயசூர்யா. மேடையிலேயே கிரீஷ் குமாரின் மார்பில் சாய்ந்துகொண்டு அவரின் இதயத்துடிப்பை மிக ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் கேட்டார் ஜெயசூர்யா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கடந்த சில தினங்களாகச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close