புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய புதிய `சிப்'! | use chip to detect cancer

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (15/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (15/03/2019)

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய புதிய `சிப்'!

புற்று நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சில அறிகுறிகளைக் கொண்டு ஆரம்பநிலையிலேயே இதைக் கண்டுபிடித்துவிடலாம். ஒரு சில வகை புற்றுநோய்களுக்கு அறிகுறிகள் தென்படாது என்பதால், `மாமோகிராம்' உள்ளிட்ட பல்வேறு கட்டப் பரிசோதனைகள் மூலம்தான் கண்டறியமுடியும். இதையடுத்து கீமோதெரபி, ரேடியோ தெரபி முறைகள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

cancer

இதற்கிடையே அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயைக் கண்டறிவதற்காக புதிய 'சிப்' ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு `லேப் -ஆன் - எ-சிப்'  (Lab-on-a-Chip) என்று பெயரிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள செல்களைக் கொண்டு இக்கருவி மூலம் ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை மிக விரைவாகக் கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். இதற்கான செலவும் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது. 

can

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மி.லி ரத்தத்தில், 50 சதவிகிதம் பிளாஸ்மா இருக்கிறது. இந்த பிளாஸ்மா துளியைக் கொண்டு `லேப் -ஆன் - எ-சிப்'  மூலம் புற்றுநோய் பாதித்திருக்கிறதா என்று கண்டறிய முடியும்.

இந்தச்  சோதனையில்  மிகவும் துல்லியமாக புற்றுநோய் செல்களால் ஏற்பட்டிருக்கும் உயிரியல் மாற்றம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம். அதன்பிறகு புற்றுநோய்க்கு என்ன மாதிரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று  தீர்மானிக்கலாம்.


[X] Close

[X] Close