வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? #Measles | Measles - including symptoms, treatment and prevention

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (17/03/2019)

கடைசி தொடர்பு:11:03 (18/03/2019)

வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? #Measles

அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம். 2017-ல் ஒவ்வொரு நாளும் 367 குழந்தைகள் தட்டம்மையால் இறந்துள்ளனர்.

வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? #Measles

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே விதவிதமான தொற்றுநோய்கள் வரிசைகட்டி வந்து மக்களை வதைக்கத் தொடங்கிவிடும். குறிப்பாக, அம்மை நோய்கள். கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 2,29,068 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டார்கள். அதில் 1,36,000 பேர் இறந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த நிறுவனத்தின் இன்னொரு புள்ளி விபரம் 2017-ல் ஒவ்வொரு நாளும் 367 குழந்தைகள் தட்டம்மையால் இறந்துள்ளனர் என்கிறது. 

தட்டம்மை

``தட்டம்மை வராமல் தடுப்பது எப்படி, வந்தால் குணப்படுத்துவது எப்படி, வராமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளனவா?’’ பொது மருத்துவர் தேவராஜனிடம் கேட்டோம். ``அம்மை நோய்கள் ஒருவகை தொற்று காரணமாக ஏற்படுகின்றன. தட்டம்மை, சின்னம்மை, அக்கி அம்மை, அம்மைக்கட்டு என இதில் பலவகைகள் இருந்தாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தட்டம்மைதான். தட்டம்மை, `மீசில்ஸ்’ (Measles) என்ற வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. சின்னம்மையைவிட இது அதிக விளைவுகளை ஏற்படுத்தும். கடுமையான காய்ச்சலுடன், மூக்கு ஒழுகுதல், தும்மல், தொடர் இருமல், கண்கள் சிவப்பாக மாறி நீர் வடிதல், கன்னங்களில் பருவைப் போன்று வெள்ளை நிறத்தில் சிறிய புள்ளிகள் தோன்றுதல் போன்றவை தட்டம்மைக்கான அறிகுறிகளாகும்.

measles

தட்டம்மைக்கு நேரடி மருந்துகள் கிடையாது. தடுக்க தடுப்பூசி உண்டு. சிலர் தட்டம்மை வந்ததை உணர்ந்ததும் வேப்பிலையை அரைத்துப் பூசுவார்கள். ஆனால், அதற்குமுன் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். பாதிப்பைக் குறைப்பதற்காக `வைட்டமின் ஏ’ மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம். இதைத் தடுக்க குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் ஒரு தடுப்பூசியும் 15 - 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியும் போடப்படும். 15 - 18 மாதங்களில் தட்டம்மையைத் தடுப்பதற்காகப் போடப்படும் தடுப்பூசி `எம்.எம்.ஆர் தடுப்பூசி’ எனப்படும்.

MMR-Vaccines

இதனால், மீசில்ஸ், மம்ஸ், ரூபெல்லா என்ற மூன்று வகையான அம்மை வைரஸ்கள் தடுக்கப்படுகின்றன. தடுப்பு மருந்துகள் கொடுப்பட்ட பிறகு, 2000 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் கிட்டத்தட்ட 79 சதவிகித இறப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு அம்மை வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிடுவதால், மீண்டும் அந்த நோய் வருவது இல்லை. தடுப்பூசியின் மூலமாகப் பெரியம்மை நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் தேவராஜன்நம்முடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கவும் நோய்கள் நம்மைப் பாதிக்காமல் இருக்கவும் மிக எளிய வழி, தடுப்பூசிப் போட்டுக்கொள்வதுதான்.

தட்டம்மை பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முதலில் நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், மோர், இளநீர், பிரஷ் ஜூஸ், பழங்கள் என நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுடன் தினமொரு கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குச் சின்னம்மை ஏற்பட்டிருக்கும்போது அந்தக் குழந்தைகளுடன் இருக்கும் வயதானவர்களுக்கு அக்கி அம்மையின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு’’ என்கிறார் டாக்டர் தேவராஜன்.

Measles Info

உலகளவில் தட்டம்மையால் அதிகமான இறப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா ஆகிய ஆறு நாடுகளில் மட்டும் 75 சதவிகித இறப்புகள் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. முடிந்தவரை, நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரித்து தட்டம்மை பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வோம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close