சிசுவின் தலை துண்டான விவகாரம்... நடந்தது என்ன?- ஒரு மருத்துவரின் கள விசாரணை! | what happened in koovathoor primary health centre?

வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (21/03/2019)

கடைசி தொடர்பு:12:48 (21/03/2019)

சிசுவின் தலை துண்டான விவகாரம்... நடந்தது என்ன?- ஒரு மருத்துவரின் கள விசாரணை!

தாயின் வயிற்றில் சிசுவின் நகர்வு (Fetal Movement ) எப்படி இருந்தது என்பதுபற்றிய எந்தத் தகவலும் அவரது கேஸ் ஷீட்டில் இல்லை. சிசு இறந்ததுபற்றி மட்டுமே அவர்களது குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். தலை துண்டானது பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சிசுவின் தலை துண்டான விவகாரம்...  நடந்தது என்ன?- ஒரு மருத்துவரின் கள விசாரணை!

ல்பாக்கம் அருகே, கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பிரசவத்தின்போது சிசுவின் தலை துண்டான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

கூவத்தூர் மருத்துவமனை

காஞ்சிபுரம் மாவட்டம், கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொம்மி. இவருக்கும் தியாகராஜன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. நிறைமாத கர்ப்பிணியான பொம்மி, பிரசவத்துக்காக நேற்று, அதிகாலை 6 மணி அளவில் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர் ஒருவர் பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அவருக்குப் போதிய பயிற்சி இல்லாததால் சிசுவின் தலையில் இடுக்கியை வைத்து வெளியே எடுத்துள்ளார். ஆனால், சிசு வெளியே வரவில்லை.

இதையடுத்து அதிக அழுத்தம் கொடுத்து தலையை இழுக்க,  சிசுவின் தலை மட்டும் தனியாக வெளியே வந்திருக்கிறது. ஆபத்தை உணர்ந்த அந்த செவிலியர், 108 அவசர ஊர்தி மூலம் பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அவருடன் பொம்மியின் அண்ணனும் உடன் சென்றார்.

சிசு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொம்மியின் வயிற்றில் மீதமிருந்த சிசுவின் உடலை மருத்துவர்கள் மருத்துவர் புகழேந்தி வெளியே எடுத்தனர். தற்போது, பொம்மியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் புகழேந்தி, இந்த மரணத்தில் பல மர்மங்கள் நிறைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்,

``மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பொம்மியின் மருத்துவ அறிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பல தகவல்கள் உள்ளன. `பீட்டல் ஹார்ட் ரேட்,  நாட் லோக்கலைஷ்டு' என்றிருக்கிறது. அப்படியென்றால் `சிசுவின் இதயத்துடிப்பு எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை, கண்டுபிடிக்கமுடியவில்லை' என்று அர்த்தம். இப்படி இருக்க, நார்மல் டெலிவரியிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற முடிவு ஏன் எடுக்கப்பட்டது. அதை உறுதி செய்தவர்கள் யார்?

குழந்தை

 

இதுபற்றி, அங்கிருந்த மருத்துவரிடம் கேட்டபோது, `மருத்துவர்கள் யாரும் அந்த நேரத்தில் இல்லாததால்தான் சிசுவின் இதயத்துடிப்பு பரிசோதனை செய்யவில்லை' என்கிறார்கள். ஆனால், `பீட்டல் ஹார்ட் ரேட்' பரிசோதனை செய்ய செவிலியர்களே போதும். பயிற்சிபெற்ற செவிலியர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அதேபோல, சிசுவின் தலை துண்டானதற்கான மருத்துவக் காரணங்களும் சொல்லப்படவில்லை.

சிசு

அடுத்ததாக, `இந்தப் பிரசவத்தில் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா?' என்ற இடத்தில் `ஆம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு ஏன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் செய்தார்கள்?
அடுத்ததாக, தாயின் வயிற்றில் சிசுவின் நகர்வு (Fetal Movement ) எப்படி இருந்தது என்பதுபற்றிய எந்தத் தகவலும் அவரது கேஸ் ஷீட்டில் இல்லை. சிசு இறந்ததுபற்றி மட்டுமே அவர்களது குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். தலை துண்டானது பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பொம்மியை ஒரு ஆம்புலன்சிலும், சிசுவின் தலையை வேறொரு ஆம்புலன்சிலும் செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.  

செங்கல்பட்டு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்ததற்கான தகவல் சீட்டு எதுவும் இல்லை. மருத்துவர்களிடம் அதுபற்றிக் கேட்டதற்கு, `அவசரத்தில் எழுதவில்லை' என்கிறார்கள். கேஸ் சீட்டே இல்லாமல், ஒருவரை மற்றொரு மருத்துவமனைக்கு எப்படிக் கொண்டு சென்றார்கள், அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.

மருத்துவ அறிக்கை

அதேபோல, ஏற்கெனவே பொம்மிக்கு அபார்ஷன் நடந்திருக்கிறது. அவருக்கு சிறப்புக் கவனம் எடுத்து பிரசவம் செய்திருக்கவேண்டும். அப்படி நடந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. அது தொடர்பான மருத்துவத் தகவல்களும் இல்லை. ஆரம்பத்திலேயே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்திருந்தால், இந்நிலை வந்திருக்காது. சிசு காப்பாற்றப்பட்டிருக்கும். இதில் ஏராளமான சட்டமீறல்கள் நடந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை இந்த மருத்துவ அறிக்கையே இவர்கள் போலியாகத் தயாரித்தது என்ற சந்தேகம் எழுகிறது. பொம்மியின் பெயரையே முதலில் தவறாக எழுதியிருந்தார்கள். நாங்கள் சொன்னபிறகு அடித்துத் திருத்தி எழுதினார்கள். 

அலட்சியமாகப் பிரசவம் பார்த்ததால்தான் சிசு மரணம் நிகழ்ந்திருக்கவேண்டும். இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படவேண்டும்'' என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்