பெண்களின் தூக்கத்தைப் பாதிக்கும் மாதவிடாய் சுழற்சி! | Menstruation cycle affects women's sleep

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (25/03/2019)

கடைசி தொடர்பு:21:20 (25/03/2019)

பெண்களின் தூக்கத்தைப் பாதிக்கும் மாதவிடாய் சுழற்சி!

மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதுண்டு. அந்த நாள்களில் வயிற்று வலி, இடுப்பு வலி, சோர்வு, மயக்கம், வாந்தி எனப் பல்வேறு இடர்பாடுகளைக் கடக்க வேண்டியதிருக்கும். இந்நிலையில் பல பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறும் நாள்களில் தூக்கமும் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 

மாதவிடாய்

அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி, 'ஒரு மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து, அடுத்த சுழற்சியில் ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு முன்பான நாள்களில் தூக்கம் பாதிக்கப்படுகிறது' என்று பெண்களிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இரவில் மூன்று முறைக்கு மேல் விழித்தல், ஆழ்ந்த தூக்கம் இல்லாத  நிலை போன்றவை ஏற்படுகிறது. இதனால் பெண்களின் தூக்கத்திறன் 3.3 சதவிகிதம் குறைகிறதாம். 

தூக்கம்

``குறிப்பாக இளம்வயது பெண்களுக்குத்தான் மாதவிடாய் சுழற்சியின்போது தூக்கம் தடைப்படுகிறதாம். கருப்பையில் சுரக்கும் ஹார்மோன்களால் இந்தப் பிரச்னைக்கு உடல் தானே தீர்வு கண்டுகொள்கிறது" என்கிறார் ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான மருத்துவ மாணவி ஆன் இ கிம்.