`மனிதர்களுக்கு மரபணு மாற்று சிகிச்சை' - வலுக்கும் எதிர்ப்பு! | WHO calls for global human genome editing research registry

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (26/03/2019)

கடைசி தொடர்பு:20:40 (26/03/2019)

`மனிதர்களுக்கு மரபணு மாற்று சிகிச்சை' - வலுக்கும் எதிர்ப்பு!

சீன மருத்துவ ஆராய்ச்சியாளரான ஜியான்குயூ, கருவிலிருந்த இரட்டையர்களுக்கு கடந்த வருடம் மரபணு மாற்று சிகிச்சை (ஜீனோம் எடிட்டிங் ) செய்திருந்தார். அதாவது, கருவிலிருக்கும்போதே மரபணுவில் சில மாற்றங்களைச் செய்திருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சிக்கு, பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மரபணு மாற்று சிகிச்சை

PC : National Human Genome Research Institute

ஜியான்குயூவின் மரபணு மாற்ற சிகிச்சைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், ஜீனோம் எடிட்டிங்கை நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பில் ஏழு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களின் கலந்துரையாடல் சமீபத்தில் நடைபெற்றது. அதன் முடிவில், உலக சுகாதார அமைப்பு சார்பாக, `இனி வரும் காலங்களில், மரபணு தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் ஆராய்ச்சி அளவில் மட்டுமே இருக்க வேண்டும். அதுவும்கூட, மறைமுகமாகவோ அரசுக்குத் தெரியாமலோ நடத்தக் கூடாது. மேலும், மனிதர்கள் மீதான ஆய்வாக அவை இருக்கக் கூடாது. ஜீனோம் எடிட்டிங் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இருக்கும் வகையிலான பதிவேடு தயாரிக்கப்பட்டு, அவை பொதுப்படுத்தப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீனோம் எடிட்டிங்

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெர்டோஸ், ``மரபணுவை மாற்றி அமைப்பதால், உடலில் ஏற்படவிருக்கும் பல்வேறு குறைபாடுகளை முன்கூட்டி தடுக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், இதுவரை மரபணு மாற்றச் சிகிச்சைகளுக்கென எந்த வரைமுறையும் கிடையாது. மருத்துவ அறம் சார்ந்து மட்டுமல்ல, மருத்துவ ரீதியாகவும் ஜீன் எடிட்டிங் செய்வது தவறு என்பதால்தான் ஆராய்ச்சி அளவிலேயே இருக்க வேண்டுமெனக் கூறுகிறோம்" எனக் கூறியுள்ளார். நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் உலக சுகாதார அமைப்பின் சார்பில் மரபணு மாற்றம் சிகிச்சைக்கான விரிவான கட்டமைப்பு, சில நெறிமுறைகளுடன் உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க