`அம்மை நோய் பாதிப்பு 300  சதவிகிதம் அதிகரிப்பு!' - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம் | measles ratio increses in worldwide

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (16/04/2019)

கடைசி தொடர்பு:18:50 (16/04/2019)

`அம்மை நோய் பாதிப்பு 300  சதவிகிதம் அதிகரிப்பு!' - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

ம்மை நோய் இந்த ஆண்டு 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வெயில் காலங்களில் ஏற்படும் நோய்களில் முக்கியமானது அம்மை. இதில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்ட பெரியம்மை நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

dise

அடுத்ததாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது `சின்னம்மை' எனப்படும் `சிக்கன்பாக்ஸ்' (Chickenpox). இது தொற்றுநோய் வகையைச் சேர்ந்தது. `வெரிசெல்லா ஸோஸ்டர்' (Varicella Zoster) என்ற வைரஸ் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது. இதேபோல் தட்டம்மை எனப்படுவது மற்ற அம்மை நோய்களைப் போல் அல்லாமல், நிமோனியா எனப்படும் தீவிர நெஞ்சுச் சளி, ஜுரம், தீவிர வயிற்றுப்போக்கு, கடும் நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு போன்ற கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

disease

1990-ம் ஆண்டு மட்டும் உலக அளவில் ஆறு லட்சம் குழந்தைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அதேபோல கடந்த 2018ல் மட்டும் 163 நாடுகளில்  28,124 பேர் அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 170 நாடுகளில் 1,12,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கரில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 800 குழந்தைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் சுமார் 700 சதவிகிதம் அம்மை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அங்கு தடுப்பூசிகள் முறையாகப் போடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அம்மை

இந்நிலையில் நியூயார்க் நகரில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் என்று  கடந்த மாதம் அவசரகால தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, அம்மை நோய் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.