'இந்த காலி டப்பாவை அடுத்த ஆட்சியில் திறந்துவிடுங்கள்!' - ஜப்பானில் களைகட்டும் 'கலாய்' வியாபாரம் | A Company In Japan Is Packing And Selling 'Air'

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (24/04/2019)

கடைசி தொடர்பு:12:25 (24/04/2019)

'இந்த காலி டப்பாவை அடுத்த ஆட்சியில் திறந்துவிடுங்கள்!' - ஜப்பானில் களைகட்டும் 'கலாய்' வியாபாரம்

டந்த 30 வருடங்களாக ஆட்சி செய்துவந்த ஜப்பான் பேரரசர் அகிஹிடோ, தனக்கு 85 வயதாவதால் அரசர் பதவியைத் துறப்பதாகக் கடந்த மாதம் அறிவித்தார். ஏப்ரல் 30-ம் தேதி, அவர் பதவியைத் துறக்க உள்ளதையடுத்து,  அவரது மூத்த மகனும் இளவரசருமான நருஹிடா, புதிய பேரரசராக மே 1-ம் தேதி முடிசூட உள்ளார்

காற்று

ஜப்பானில், ஒவ்வொரு அரசரின் காலமும் ஒரு சகாப்தமாக வரையறுக்கப்படும். அந்த வகையில், அகிஹிடோவின் காலம் 'ஹெய்செய்' (Heisei) என்று கூறப்பட்டது. வரப்போகும் நருஹிடாவின் ஆட்சிக்காலம், ரெய்வா (Reiwa) என்று அழைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெய்வா என்றால் ஜப்பானிய மொழியில், நல்லிணக்கம் என்று பொருளாம். 'ரெய்வா' என்பதற்கான பெயர்க்காரணம், அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புது சகாப்தத்தை வரவேற்கும் வகையில், ஜப்பானியர்கள் சுவாரஸ்யமாகப் பல்வேறு விஷயங்களைச் செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான், காற்று விற்பனை! ஆம், கடந்த சில தினங்களாக, டப்பாக்களில் அடைக்கப்பட்ட 'காற்று' விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஜப்பானின் தெருவோரக் கடைகள் தொடங்கி, ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து விற்பனைச் சந்தைகளிலும் தளங்களிலும் இந்தக் 'காற்று' வலம் வந்துகொண்டிருக்கிறது. தனியார் தொழில் முனைவோர் சார்பில், இந்த 'காற்று விற்பனை' முயற்சி நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த டப்பாக்கள் அனைத்திலும் 'ஹெய்செய்' என எழுதப்பட்டுள்ளது. 

ஹெய்செய் ஆட்சியின் 'காற்று'

அந்தத் தொழில் முனைவோர் அமைப்பின் இயக்குநர், இதுகுறித்துக் கூறும்போது, "புதிய தலைவர் பதவியேற்பின்போது, பழைமையிலிருந்து விடுபட்டதுபோன்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும் என்றுதான் இந்த விற்பனை தொடங்கப்பட்டது. ஜப்பானின் ஹெனாரி (Henari) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் டப்பாக்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார். ஜப்பானியர்கள், ராசியான எண் என்பதற்காக 'ஐந்து' ஜப்பானிய நாணயம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்வா என்று பெயர் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்ஸ், மொபைல் கவர், பாட்டில்கள் போன்றவையும் விற்பனைசெய்யப்பட்டுகின்றன.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க