மஞ்சள்காமாலை முதல் எலிக்காய்ச்சல் வரை‌‌‌... கோடையில் நீரால் பரவும் நோய்கள்... தவிர்க்கும் வழிகள்! | How to prevent water borne diseases during summer?

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (24/04/2019)

கடைசி தொடர்பு:19:25 (24/04/2019)

மஞ்சள்காமாலை முதல் எலிக்காய்ச்சல் வரை‌‌‌... கோடையில் நீரால் பரவும் நோய்கள்... தவிர்க்கும் வழிகள்!

கோடையில், நீர்தான் நம் உடலைக் காக்கும் அடிப்படை ஆதாரம். அதேவேளையில், சுகாதாரமற்ற நீரையோ அல்லது அப்படிப்பட்ட நீரால் தயாரிக்கப்பட்ட பானங்களையோ பருகும்போது கடுமையான உடல் உபாதைகள் உண்டாகிவிடும்.

மஞ்சள்காமாலை முதல் எலிக்காய்ச்சல் வரை‌‌‌... கோடையில் நீரால் பரவும் நோய்கள்... தவிர்க்கும் வழிகள்!

கோடைக்காலத்தில் வெயிலுக்கு இதமாக ஏதாவது குடித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். குளிர்ச்சியான தண்ணீர் அல்லது குளிர்பானங்கள் குடித்தால், தொண்டைக்குழியில் இறங்கும்போது இதமாக இருக்கும். சாலைகளில் குளிர்பானக் கடைகளைப் பார்த்துவிட்டால், நம் கால்கள் நம்மையறியாமல் நின்றுவிடும். உடலின் நீர்த் தேவையை, 'தாகம்' என்னும் அறிகுறியின் வாயிலாக உடல் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். நாமும் அதைத் தணிக்க பல முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்போம். ஐஸ் க்ரீம்கள், சாலையோரத்தில் விற்கப்படும் கரும்பு ஜூஸ், பழ ஜூஸ், சர்பத், மோர், கூழ் என எதைப் பார்த்தாலும் வாங்கிப் பருகத் தோன்றும். எங்கே தண்ணீர் கிடைத்தாலும் எடுத்து இரண்டு வாய் ஊற்றிக்கொள்வோம்.

கோடை

கோடையில், நீர்தான் நம் உடலைக் காக்கும் அடிப்படை ஆதாரம். அதேவேளையில், சுகாதாரமற்ற நீரையோ அல்லது அப்படிப்பட்ட நீரால்முத்துலட்சுமி தயாரிக்கப்பட்ட பானங்களையோ பருகும்போது கடுமையான உடல் உபாதைகள் உண்டாகிவிடும். வயிற்றுப்போக்கு, வாந்தி என்று வதைத்து உடலின் நீர்ச்சத்தைக் காலிசெய்துவிடும். அதனால் உண்டாகும் உடற்சோர்விலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கே சில நாள்கள் பிடித்துவிடும்.  கோடைக்காலத்தில் தேவையான அளவு நீர் அருந்த வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நாம் குடிக்கும் நீர் சுகாதாரமாக இருக்கிறதா, பானங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டியதும் அவசியம். 

''நீரின் வாயிலாக ரோட்டோ, போலியோ, ஹெப்படைட்டிஸ், சல்மோனெல்லா டைபி (Salmonella typhi) எனப் பல வகையான வைரஸ்கள்/பாக்டீரியாக்கள் பரவுகின்றன. எந்த வகையான தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ அதற்கேற்ப உடல் நலப்பாதிப்புகளும் இருக்கும். ரோட்டோ வைரஸ் தாக்கினால் வாந்தி, வயிற்றுப்போக்கு உண்டாகும். போலியோ வைரஸால் முடக்குவாதம் உண்டாகும். நம் நாட்டில் பெரும்பாலும் போலியோ வைரஸ் ஒழிக்கப்பட்டுவிட்டது. 'சல்மோனெல்லா டைபி' (டைபாய்டு) வைரஸால் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும், ஹெபடைட்டிஸ் 'ஏ' மற்றும் 'இ' வைரஸால் மஞ்சள் காமாலையும் உண்டாகும். 

வைரஸ்

மேற்கண்ட இந்த வைரஸ்/பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு கண்டிப்பாக உண்டாகும். அதில் ரத்தம் கலந்துசென்றால் நிச்சயமாகத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். தொடர்ச்சியாகக் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. மருத்துவரால்தான் எந்த வைரஸால் பாதிப்பு உண்டாகியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சையளிக்க முடியும். 

பொதுவாகக் கோடைக்காலங்களில் தேவைக்கதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். அவை சுகாதாரமான குடிநீராக இருக்க வேண்டியது அவசியம். தவிர, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைத் தவிர்த்து, இளநீர், மோர், தயிர் போன்றவற்றை அருந்த வேண்டும். கைகளை நன்றாகக் கழுவி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் இருந்தால் இது போன்ற பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்'' என்கிறார் சமூக மருத்துவ நிபுணர் முத்துலட்சுமி முத்தையா. 

ஐஸ்

நீரால் தயாரிக்கப்படும் பானங்கள் என்றில்லை, பயணங்களின்போது வழியில் விற்கப்படும் வேர்க்கடலை, சோளம் போன்றவற்றை குழந்தைசாமி வாங்கிச் சாப்பிடும்போதுகூடக் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல, சாலையோரங்களில் விற்கப்படும் கரும்பு ஜூஸ், பழ ஜூஸ் ஆகியவை சுகாதாரமான இடத்தில், சுகாதாரமான தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றனவா என்பதையும் கவனமாகப் பார்த்து வாங்கி அருந்துவது நல்லது. 

சுகாதாரமற்ற நீரால் தயாரிக்கப்படும் பொருள்களைச் சாப்பிட்டால், என்ன விளைவுகள் உண்டாகும் என்பதற்கு, சமீபத்தில் நாகை மாவட்டத்தில் நடந்த சம்பவம் சாட்சியமாய் இருக்கிறது. சீர்காழி அருகே, வானகிரி என்னும் கிராமத்தில் நடந்த திருவிழாவில், ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 90-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சுகாதாரமற்ற நீரில் தயாரிக்கப்பட்டதால்தான் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். 

இதுகுறித்து தமிழக பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்,

''டயேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீரில் இருந்துதான் உருவாகின்றன. அதனால் குடிக்கும் நீரை மிகவும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும். வாட்டர் டேங்குகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வெளிப்புறங்களில் சிறுநீர், மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர, குடிக்கும் நீரை நன்றாகக் கொதிக்கவைத்துப் பருக வேண்டும். தேவைப்படும் நேரத்தில் கொதிக்க வைக்காமல், முன்பே தேவையான அளவு கொதிக்கவைத்து, ஆறவைத்துத் தேவைப்படும்போது குடித்துக்கொள்ளலாம்.

இளநீர்

வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அரசு முயற்சிசெய்தால் மட்டும் இது போன்ற நோய் பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது. மக்களும் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வெளியில் சுகாதாரமில்லாமல் விற்கக்கூடிய உணவுப் பண்டங்களை, பானங்களைச் சாப்பிட, அருந்தக் கூடாது'' என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்