முதன் முதலாக மலேரியாவுக்குத் தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்! | World’s first malaria vaccine launched in Africa

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (25/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (25/04/2019)

முதன் முதலாக மலேரியாவுக்குத் தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்!

ஆப்பிரிக்க நாடான மலாவியில் முதல்முறையாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது.

லகில் முதல்முறையாக மலேரியா காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மலேரியா தடுப்பூசி

மலேரியா, மற்ற காய்ச்சல்களைவிட தீவிரமானது. இன்றைக்கும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவது என்பது பல நாடுகளில் பெரும் சவாலாக இருக்கிறது. உலகம் முழுக்க ஆண்டுதோறும் 4.35 லட்சம் பேரின் உயிரிழப்புக்குக் காரணமான இக்காய்ச்சல், குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. அதாவது, ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இந்தக் காய்ச்சலால் உயிரிழப்பதாகக் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அதிலும் குறிப்பாக, ஆப்பிரிக்காவில்தான் இதன் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊசி போடுதல்

மலேரியா அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக இருப்பதால், இந்நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. அதன் பயனாக முதல் முறையாக `ஆர்டிஎஸ், எஸ்' (RTS,S ) என்னும் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இளம் குழந்தைகளிடமும், 2007-ம் ஆண்டு ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும் `கிளினிக்கல் டிரையல்'  செய்து பார்க்கப்பட்டது. அதில் வெற்றி கிடைத்ததையடுத்து, ஆப்பிரிக்க நாடான மலாவியில் முதல்முறையாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், வரும் வாரங்களில் மற்ற இரு ஆப்பிரிக்க நாடுகளான கானா மற்றும் கென்யா போன்றவை இந்த மலேரியா தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க