இதய வலியை குணப்படுத்தும் புதினா! - அமெரிக்க மருத்துவர் ஆய்வில் தகவல் | puthina cures heart pain

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (29/04/2019)

கடைசி தொடர்பு:20:53 (29/04/2019)

இதய வலியை குணப்படுத்தும் புதினா! - அமெரிக்க மருத்துவர் ஆய்வில் தகவல்

யற்கை மூலிகைகளில் அரிய மருத்துவக் குணங்கள் அடங்கி உள்ளன. இதனால் தற்போது பலரும் மூலிகை மருத்துவத்தை நாடி வருகின்றனர். அந்த வகையில் புதினா இதய வலியைக் குணமாக்குவதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மருத்துவர்கள்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மருத்துவ நிபுணர் முகம்மது கலாப். இவர் அண்மையில், புதினாவின் மருத்துவக் குணங்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அதில் புதினா இதய வலி மற்றும் மூச்சுக்குழாயில் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்துவதைக் கண்டறிந்தார். 

அவர் மேற்கொண்ட இந்த ஆய்வின்போது, மூச்சுக்குழாய் மற்றும் இதய வலி பிரச்னை உள்ள 38 நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புதினா எண்ணெயில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை வழங்கினார். மாத்திரை உட்கொண்ட 63 சதவிகிதம் பேர் இதய வலி மற்றும் தசை தொடர்பான வலிகள், மூச்சுப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெற்றனர். உணவு உட்கொண்டபிறகு நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

மருத்துவர்கள்

`புதினா உணவுக்குழாயில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தசை வலியைப் போக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. புதினாவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு நல்ல மருத்துவக் குணம் உள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவுக்குழாய் பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடும்போது அவர்களுக்கு மூச்சுத் தொந்தரவு இருக்கும்.

அவர்களுக்கு புதினா சிறந்த மருந்து. இது எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. மூச்சுத்திணறல் உள்ளவர்கள் தாராளமாக இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். குறைந்த செலவில் இந்த மருந்தைத் தயாரிக்கலாம்'' என்று ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு நிபுணரான  டொனால்டு கேஸ்டில் கூறியுள்ளார்.