`அதிகம் பேசும் பெற்றோரா நீங்கள்...உங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்டாக வளர்வார்கள்!' - ஆய்வில் தகவல் | New research about Young children who have talkative parents getting better cognitive skills

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (02/05/2019)

கடைசி தொடர்பு:20:40 (02/05/2019)

`அதிகம் பேசும் பெற்றோரா நீங்கள்...உங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்டாக வளர்வார்கள்!' - ஆய்வில் தகவல்

''திகமாகப் பேசிக்கொள்ளும் பெற்றோர்களின் உரையாடலைக் கேட்டு வளரும் குழந்தைகள், நல்ல அறிவாற்றலுடன் திகழ்கிறார்கள்'' என்கிற சுவாரஸ்யமான ஆய்வு முடிவு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

குழந்தைகள்

இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில், கின்டர் கார்டனுக்குச் செல்லும், இரண்டு முதல் நான்கு வயதுடைய 107 குழந்தைகளின் உடலில் ரகசிய ஒலிசேமிப்புக் கருவியை பொருத்தினர். 

பெற்றோர்

நாளொன்றுக்குப் பதினாறு மணி நேரம் வீதம் மூன்று நாள்களுக்கு, அந்தக் குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் அல்லது அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களிடம் பேசுகின்ற உரையாடல்களைப் பதிவுசெய்தனர். பின்னர் அது அனைத்தையும் ஆய்வகங்களில் வைத்துப் பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிட்டனர். அதில் பெற்றோரின் பேச்சுகளை அதிகமாகக் கேட்டு வளரும் குழந்தைகளை அதிகமான சொற்களை அறிந்தவர்களாகவும், அது அவர்களின் மொழி வளர்ச்சிக்கு உதவுவதாகவும், மிகுந்த கற்றல் திறனை உடையவர்களாகவும் இருப்பதைக் கண்டறிந்தனர். எனினும் அதற்கான துல்லியமான காரணங்கள் குறித்து இன்னும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க