`ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா, யோசிக்காம டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவேன்!'- நடிகை வரலட்சுமி | Actress Varalakshmi Sarathkumar shares her Stress Reliving Technique

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/05/2019)

கடைசி தொடர்பு:17:00 (04/05/2019)

`ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா, யோசிக்காம டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவேன்!'- நடிகை வரலட்சுமி

நடனத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டு சாதித்தவர் டான்ஸ் மாஸ்டர் ஜெஃப்ரி வார்டன். அவர் தனது நடன அரங்கத்தில் `இன்டர்நேஷனல் டான்ஸ் டே'யை சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். நடிகர் பரத், நடிகைகள் மேகா ஆகாஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது மற்ற மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

வரலட்சுமி சரத்குமார் - பரத்

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் நடனத்துக்கும் அவருக்குமான உறவு குறித்து, நம்மிடையே சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். 

``என்னோட நடிப்புத் திறமைக்கான அடித்தளமே நடனம்தான். சரியா சொல்லணும்னா, நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். இப்போவும் நடனமாடிக்கிட்டுதான் இருக்கேன். டான்ஸ், என்னோட லைஃப் ஸ்டைல்ல ஒண்ணா மாறிடுச்சு. பல நேரங்கள்ல, ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்ணினா, யோசிக்காம டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவேன். ரொம்ப சந்தோஷமா இருந்தாக்கூட டான்ஸ்தான் என்னோட சாய்ஸ். 

மாஸ்டர் ஜெஃப்ரி வார்டன் - பரத் - வரலட்சுமி - மேகா ஆகாஷ் - மாணவர்கள்

டான்ஸ் ஆடும்போது இப்படித்தான் ஆடணும்னு இல்லாம, ஏதாச்சும் குத்துப் பாட்டுக்குக்கூட சோர்வாகும் வரைக்கும் ஆடுவேன். வாய்ப்பிருந்தா, ஜெஃப்ரியோட இந்த கிளாஸுக்கு வந்து, நண்பர்களோட சேர்ந்து ஆடுவேன். எனக்கும் வொர்க் அவுட்டுக்கும் ரொம்ப தூரம். ஆனாலும் நான் ஆரோக்கியமா இருக்கேன்னா, அதுக்குக் காரணம், டான்ஸ் மட்டுந்தான். ஒவ்வொரு வருஷமும், டான்ஸ் டே வரும்போது நான் சென்னையில இருந்தா, ஜெஃப்ரியோட ஸ்டூடியோவுக்கு வந்து நண்பர்களோட சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுறது வழக்கம்!" என ஃபுல் எனர்ஜியுடன் பேசினார் வரலட்சுமி.

International Dance Day - டான்ஸ் டே

`இன்டர்நேஷனல் டான்ஸ் டே'யை கேக் வெட்டிக் கொண்டாடிய பிறகு, அனைவரும் இணைந்து நடனமாடினர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர். பரத், தனது அடுத்தடுத்த படங்கள்குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோ பேட்டியை முழுமையாகப் பார்க்க...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க