65 குழந்தைகள் உட்பட 90 பேருக்கு ஹெச்.ஐ.வி! - ஒரே ஊசியால் பதறவைத்த பாகிஸ்தான் டாக்டர் | Doctor arrested for spreading HIV in Larkana

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (04/05/2019)

கடைசி தொடர்பு:19:00 (04/05/2019)

65 குழந்தைகள் உட்பட 90 பேருக்கு ஹெச்.ஐ.வி! - ஒரே ஊசியால் பதறவைத்த பாகிஸ்தான் டாக்டர்

பாகிஸ்தானின் லர்கானா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ஊசியை மறுசுழற்சிக்கு அனுப்பாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால், ஏறத்தாழ 90 பேருக்கு ஹெச்.ஐ.வி பரவியது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் சுகாதாரத் துறையினர் அளித்த புகாரின்பேரில், குற்றச் செயலில் ஈடுபட்ட மருத்துவர் முசாஃபர், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெச்.ஐ.வி

ஹெச்.ஐ.வி கிருமிகளைக் கட்டுப்படுத்துவதற்கென செயல்படும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய முகாமின்போது, 90 பேருக்கு ஹெச்.ஐ.வி பாதித்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அனைவரும், ஏறத்தாழ ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் சந்தேகமடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கினர். ஆய்வின் முடிவில், மருத்துவமனை குறித்த விவரமும் மருத்துவர் முசாஃபர் பற்றிய விவரமும் கிடைத்தன. 

எய்ட்ஸ்

90 பேருக்கு ஹெச்.ஐ.வி ஏற்பட காரணமாக இருந்த மருத்துவர் முசாஃபரும்கூட ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, டாக்டர் முசாஃபரைக் கைதுசெய்த காவல் துறை அதிகாரிகள், அது தொடர்பான விவரங்கள், மருத்துவருடனான விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள், பின்வரும் நாள்களில் முறையாகச் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ஹெச் ஐ வி - தொற்று வியாதி

லர்கானா நகரத்தின் சுகாதாரத்துறை தலைவர் அப்துல், இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "இதுவரை ஏறத்தாழ 90 பேருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், பாதிப்படைந்தவர்களில் 65 பேர் குழந்தைகள். இதையடுத்து, அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர்கள் யாருக்கும், ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை'' என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளில், எட்டு மாதம் முதல் எட்டு வயதுள்ள குழந்தைகளே அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 என்ற எண்ணிக்கை, அதிகமாகவும் இருக்கலாம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க