மகிழ்ச்சி, கோபம், கவலை... ஆண்களைவிட பெண்களே எமோஷனல்... உலக சர்வே! | Happiness, anger, anxiety... Women are more emotional than men. Survey Report!

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (07/05/2019)

கடைசி தொடர்பு:11:47 (07/05/2019)

மகிழ்ச்சி, கோபம், கவலை... ஆண்களைவிட பெண்களே எமோஷனல்... உலக சர்வே!

எளிதில் உணர்ச்சி வசப்படுவதிலும், அதிகமாக எமோஷனலை வெளிக்காட்டுவதிலும் பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில், ஆண்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். 

மகிழ்ச்சி, கோபம், கவலை... ஆண்களைவிட பெண்களே எமோஷனல்... உலக சர்வே!

கிழ்ச்சி, கவலை, கோபம், வெறுப்பு, மன அழுத்தம் எனப் பல்வேறு உணர்வுகளைக் கொண்டவர்கள்தான் மனிதர்கள். மனிதர்கள் தங்களின் உணர்வுகளைச் சமூக விழுமியங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தவோ, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவோ வேண்டும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் பெரிய பிரச்னை, உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதுதான். இது, இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெரிய ஆளுமைகளுக்கும் உள்ள சிக்கலாக உருவெடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் எனப் பலர் குறித்த கேலி மீம்ஸ் மற்றும் விமர்சனங்கள் மிகுந்து வருவதற்குக் காரணம், இதுதான்.  

உணர்வுகள்

தாறுமாறாக எமோஷனலாகி, தேவையான இடத்தில் தேவையான அளவு உணர்வுகளை வெளிப்படுத்துவதும், தேவையற்ற இடத்தில் அளவுக்கு அதிகமாக உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பதுமே இதன் காரணம். 

உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்குத் தகுந்த மதிப்பினைக் கொடுக்கும்போது, நண்பர்கள் வட்டத்தில், குடும்பத்தில், அலுவலகத்தில் என்று பல இடங்களில் மதிப்பும், மரியாதையும் கூடுகிறது. பொதுவாக, ஆண், பெண் இருவருமே உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வித்தியாசமானவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவதிலும், அதிகமாக எமோஷனலை வெளிக்காட்டுவதிலும் பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில், ஆண்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். 

உணர்வுகள்

சமீபத்தில் வெளியான `காலாப் 2019 குளோபல் எமோஷன்ஸ்' (Gallup 2019 Global Emotions) அறிக்கையின்படி, 15 வயது முதல் 29 வயதினர்தான் அதிகளவில் கோபப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 30 வயது முதல் 49 வயதுடையவர்கள் அதிகளவு மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். பொருளாதார ரீதியாக, வசதியற்றவர்களில் 68 சதவிகிதத்தினர் மன அழுத்தத்துடனும், 56 சதவிகிதம் பேர் கவலையுடனும் இருக்கின்றனர். ஆனால் வசதி உள்ளவர்களிலும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே மன அழுத்தத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

உணர்வுகள்

அதேபோல், அதிக மன அழுத்தத்துடன் வாழும் மக்கள் உள்ள முதல் 10 நாடுகளில் கிரீஸ் நாடு முதலிடத்தில் உள்ளது. இங்கு 59 சதவிகிதம் பேர் அதிக மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். அதிக கவலையுடன் வாழும் மக்கள் உள்ள முதல் 10 நாடுகளில் மொசாம்பிக் நாட்டில் 63 சதவிகிதம் பேர் அதிக கவலையுடன் வாழ்கின்றனர். அதிக கோபத்துடன் வாழும் மக்கள் உள்ள நாடுகளை எடுத்துக் கொண்டால் ஆர்மீனியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து இராக், இரான் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பத்தாவது இடத்தில் உள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை 22 சதவிகித மக்களே மன அழுத்தத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது அதிகரிக்கவும் செய்யலாம். எனவே, பொதுவெளியில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அடுத்தவர்களின் உணர்வுகளைக் கையாள்வது குறித்த கவனம் மிகவும் அவசியம்.

உணர்வுகள்

உங்கள் மீது பிறர் வைத்திருக்கும் மதிப்பீடுகளைச் சிதறடிக்கும் வகையில், எந்த உணர்வையும் வெளிப்படுத்தக் கூடாது. எச்சரிக்கை உணர்வோடு நடக்கவேண்டியது அவசியம். உங்களுடைய மகிழ்ச்சிக்காகச் செய்கிற ஒரு செயல், பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். 

உணர்வுகளை எப்போதும் கட்டுப்பாட்டோடுதான் வெளிப்படுத்த வேண்டும். மனதில் தோன்றிய எல்லாவற்றையும் முழுமையாக வெளிப்படுத்திவிடக் கூடாது. `நம் எமோஷன், மற்றவர்களிடம் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்?’ என்பதை யோசித்து, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். கூடுமானவரை, பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி, கவலை, கோபம்

உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க, தினசரி மூச்சுப்பயிற்சி செய்வது, ஒன்றிலிருந்து நூறு வரை மெதுவாக எண்ணுவது, கோபம் வரும்போது அதைத் திசை திருப்பத் தண்ணீர் குடிப்பது, ஒருவரால் பிரச்னை ஏற்பட்டு நமக்குக் கோபம் வந்தால் உடனே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவது, வேகமாக நடப்பது, பாட்டுக் கேட்பது போன்ற ஆலோசனைகளைக் கடைப்பிடித்து தேவையில்லாத எமோஷனலைக் குறைக்கலாம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்