பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்! #NewBornBabyCare #Video | Tips for Moms with Newborn Babies

வெளியிடப்பட்ட நேரம்: 21:27 (09/05/2019)

கடைசி தொடர்பு:21:28 (09/05/2019)

பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்! #NewBornBabyCare #Video

குழந்தைக்கு தொப்புள்கொடி விழாமல் இருந்தால் என்ன செய்யலாம்?

முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு, குழந்தை அழுவதற்குக் காரணம் என்ன, குழந்தைக்குப் போதிய அளவு தாய்ப்பால் கிடைத்துள்ளதா எனக் குழந்தை வளர்ப்பில் பல சந்தேகங்கள் இருக்கும்.

தாய் சேய் நலம்

புது தாய்மார்களுக்கு எழும், இப்படியான சந்தேகங்களுக்கு விடை சொல்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஜெ.ஷியாமலா. ``பொதுவாகக் குழந்தை அழும்போது, பல தாய்மார்கள் குழந்தைக்குப் பசி எடுக்கிறதோ என்றுதான் நினைப்பார்கள். ஆனால், சில குழந்தை போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருந்தால்கூட அழும். இன்னும் சில குழந்தைகள், வயிறு வலி காரணமாக அழும். சில குழந்தைகள், அம்மாவின் அரவணைப்புக்காக அழும். எனவே, அம்மாக்கள் முதலில் குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்த முயலவும். தொடர்ந்து அழுதால் உடலில் ஏதேனும் பூச்சி கடித்துள்ளதா, வீக்கம் இருக்கிறதா, தடிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க வேண்டும். அதன்பின், பால் கொடுக்க வேண்டும். பால் குடித்தும் அழுகை நிற்கவில்லை எனில் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைக்குப் போதிய அளவு பால் கிடைத்திருந்தால், அடுத்த மூன்று மணி நேரத்துக்குக் குழந்தை நிம்மதியாகத் தூங்கும். வாரம் ஒரு முறை குழந்தைக்கு உடல் எடையைச் சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் எடை அதிகரிக்கவில்லையெனில், தாய்ப்பால் முழுமையாகக் கிடைக்கவில்லை எனப் பொருள். அந்தத் தாய்மார்கள், கவனமாகச் செயல்பட வேண்டும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் ஷியாமலா.

குளிப்பாட்டும் விதம்

குழந்தையைக் குளிப்பாட்டும் விதத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும், குழந்தைக்குத் தொப்புள்கொடி விழாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும், குழந்தையின் சருமத்துக்கு கடலை மாவு பாசிப்பயறு மாவு உபயோகிக்கலாமா என்பது போன்ற பல சந்தேகங்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் ஷியாமலா விடையளித்துள்ளார். அந்த வீடியோவை முழுமையாக இங்கே காணலாம்...

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க