"இறப்பதற்கு முன் ஐபிஎல் பார்க்க வேண்டும்"  - 9 வயது சிறுவன் #SavePavan | Last wish of a 9 years old

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (10/05/2019)

கடைசி தொடர்பு:18:28 (10/05/2019)

"இறப்பதற்கு முன் ஐபிஎல் பார்க்க வேண்டும்"  - 9 வயது சிறுவன் #SavePavan

ஐ.பி.எல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. 'தல' தோனியின் அணி, சொல்லவா வேண்டும். அதிலும் தோனியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூப்பர் ஹீரோவாக பார்ப்போர் நம்மில் பலர் உண்டு. அதேபோலதான் பவனுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகவும் பிடிக்கும். அதிலும் தோனி என்றால் உயிர். அவனுடைய மிகப்பெரிய உத்வேகமே தோனிதான். சென்னை ஐபிஎல் அணியில் இடம்பெற வேண்டுமென்பதே அவனது கனவாக இருக்கிறது. சென்னை அணி ஆடும் ஆட்டத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும், மைதானத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தந்து பெற்றோரைக் கேட்டுகொண்டே இருப்பான். 

மகனின் ஆசையை நிறைவேற்ற தங்களது ஏழ்மையை துச்சமாக நினைத்து பணத்தை சேகரிக்க தொடங்கினர். இந்த மாதம் நிச்சயம் மைதானத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று பவனுக்கு, அவனது பெற்றோர் வாக்கு கொடுத்தனர். ஆனால் இப்போது அவன் மைதானத்திற்கு அருகே ஒரு மருத்துவமனையில் இருக்கிறான். மிகவும் கொடிய நோய்க்கான சிகிச்சையில் உள்ளான்.

எப்போதும்போல நண்பர்களுடன் கிரிக்கெட் ஆட சென்ற பவன், அன்று ஒரு கேட்ச்சை தவறவிட அது அவனது மணிக்கட்டில் பட்டது. கிரிக்கெட்டில் பலமுறை இதுபோன்று நடந்துள்ளது, ஆனால் அன்று அவனுக்கு வலியை பொறுத்துக்கொள்ள முடியாத நிலைமை. நண்பர்கள் சூழ்ந்து நிற்க ஓடிவந்தார் அவனது தாயார் அருணி. வீட்டிற்கு அழைத்துச் சென்று கைக்கு மசாஜ் செய்தார். அதெல்லாம் அவனை சரிபடுத்தவில்லை, மாறாக அவனது தோள்பட்டை மற்றும் நெஞ்சுவலியை அதிகப்படுத்தியது. பதற்றமடைந்த அருணி உடனடியாக மருத்துவமனைக்கு பவனை அழைத்துச் சென்றார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லுகேமியா நோயால் பவன் அவதிக்குள்ளானான். மீண்டும் பவன் அதே நோயால் பாதிக்கப்படக் கூடாது என்று ரத்த பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தனர் பவனின் பெற்றோர். ஆனால் நோயின் தாக்கம் அதையும்விட பெரியதாக இருந்தது. பவன், Acute Myeloid Leukemia (புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜை பாதிப்பு) நோயால் தாக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் கூறினார். மருத்துவர் சொல்லி முடிக்கும்போதே உடைந்து அழத்தொடங்கினார் அருணி. "என் மகன் என்ன பாவம் செய்தான், அவனுக்கு ஏன் இந்தக் கொடுரமான நோய் மீண்டும் தாக்கியுள்ளது" என்று கதறினார். கடந்த முறை எடுத்துக்கொண்ட சிகிச்சைக்கு பிறகு சில புற்றுநோய் செல்கள் அவனது உடலிலேயே தங்கிவிட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார். 

ஆந்திர பிரதேசத்தில் இருந்து அருணியும், பவனும் மருத்துவத்துக்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தனர். விவசாயி மற்றும் இரவு ஏடிஎம் செக்யூரிட்டியாக பணிபுரிந்து மாதம் ஒன்பதாயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் பவனின் தந்தைவேலையை விடமுடியவில்லை, பவனின் மருத்துவத் தேவைகளுக்கு தொடர்ந்து வேலை செய்தல் முக்கியமாகும். மருத்துவமனை வளாகத்திலேயே அருணி தங்கிக்கொண்டு மகனை பார்த்துக்கொள்கிறார். இப்போது பவனுக்கு கீமோதெரபி செஷன் நடந்து வருகிறது. 

பவனுக்கு தலைமுடி முழுவதும் முன்புபோல் கொட்டத்தொடங்கிவிட்டது. மருத்துவர்கள் விரைவில் ட்ரான்ஸ்பிளான்ட் சிகிச்சை செய்தாகவேண்டும் என்று கூறிவிட்டனர். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு ரூபாய் 25 லட்சம் தேவையாக இருக்கிறது. உயிருக்கு போராடும் தனது 9 வயது மகனைக் காப்பாற்ற பெற்றோரிடம் எந்தவித சேமிப்பும் இல்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து தனது மகனின் உயிரைக் காப்பாற்றிவிட மாட்டோமா என்று நாட்களை கடத்திவருகிறார் வருணி.

உயிருக்குப் போராடி வரும் பவன், "நான் இறக்கப் போகிறேன் என்று நினைக்கிறன், எனது உடல் முழுவதும் வலிக்கிறது. நான் இறப்பதற்குள் மைதானத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று தாயிடம் கதறும் குரல் அருணியை சுக்குநூறாக்கியது. அருணியின் நிலையை அறிந்து, நிதி திரட்டும் இணையதளமான 'KETTO' உதவ முன்வந்துள்ளது. தனது மகனின் ஆசையை நிறைவேற்றி வைக்க நினைத்த பெற்றோர், தற்போது அவனது உயிரைக் காப்பாற்ற துடித்து வருகின்றனர். பவனின் உயிரை காப்பாற்ற நம்மால் முடிந்த உதவியை செய்வோம், மற்றவர்கள் உதவிக்கரம் நீட்டவும் வழிவகுப்போம். 

பவனுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்கள்  இந்த https://www.ketto.org/stories/supportpavan?utm_campaign=supportpavan&utm_medium=position_1&utm_source=external_vikatan லிங்கிற்குச் சென்று உதவலாம்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க