`இனி 56 மணி நேரம் வரை நுரையீரலைச் சேமிக்க முடியும்!' - நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வு | Injured Lungs Can Be Regenerated for Transplant: Study

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (15/05/2019)

கடைசி தொடர்பு:21:58 (15/05/2019)

`இனி 56 மணி நேரம் வரை நுரையீரலைச் சேமிக்க முடியும்!' - நம்பிக்கையளிக்கும் புதிய ஆய்வு

தானமளிக்க முன்வரும் நபர்களின் உடல் உறுப்புகளை அதற்குரிய காலம் கடந்தும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த ஆய்வை, கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ந்தவொரு உறுப்பு தானமளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அதன் செயல்திறனை இழக்கத் தொடங்கிவிடும். அந்த வகையில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்ட பிறகும், அதை மறு உருவாக்கம் செய்து மற்றொருவருக்குப் பொறுத்தும் வகையில் தகுதிப்படுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த நவீன முறை, 'கிராஸ் சர்குலேஷன் பிளாட்ஃபார்ம்' (cross-circulation platform) எனப்படுகிறது. இந்தப் புதிய முறையில் தற்போது 'நுரையீரல்' குறித்து ஆய்வு செய்துள்ளனர். 

நுரையீரல்

``தானம் அளிக்க முன்வருபவர்களில், ஏறத்தாழ 80 சதவிகிதம் பேரின் நுரையீரல் காலம் தாழ்த்திக் கிடைப்பதால் அவை பாதிப்படைந்தவையாக இருக்கின்றன'' என்கின்றனர் ஆய்வாளர்கள். அதனால் பலரும் நுரையீரல் தானம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்றும், அந்த நிலையை இந்த நவீன முறை மாற்றியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 

நியூயார்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த ஆய்வு குறித்து, ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் கோர்டனா பேசுகையில், ``தானம் அளிக்க முன்வரும் நபர்களின் உடல் உறுப்புகளை, அதற்குரிய காலம் கடந்தும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த ஆய்வை, கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இன்றைய தேதியில் நுரையீரல் தானம் அளிக்கப்படும்போது, அதை ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை மட்டுமே பாதுகாக்க முடியும். அதற்குமேல், நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்படையத் தொடங்கும். அப்படி நுரையீரல் பாதிக்கப்படும்போது, இந்த நவீன முறையை உபயோகப்படுத்தி அதைப் பாதுகாத்துக்கொள்ளலாம். ஏறத்தாழ 36 முதல் 56 மணி நேரம் வரை தானம் கிடைக்கும் நுரையீரலைப் பாதுகாக்க முடியும்" என்கிறார்.  

ஆய்வு

நுரையீரலைப் பாதிக்கும் மிகமுக்கியமான பிரச்னை இரைப்பை வீக்கம் (gastric aspiration). அப்படிப் பாதிக்கப்பட்ட ஒரு நுரையீரலை, தங்களின் ஆய்வுக்குட்படுத்தி அதை முழுவதுமாக சீரமைத்து வெற்றிகண்டுள்ளனர் ஆய்வாளர்கள். 'கிராஸ் சர்குலேஷன் பிளாட்ஃபார்ம்' (cross-circulation platform) என்ற இந்த நவீன முறை மூலம் நுரையீரல் மட்டுமன்றி இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற பகுதிகளையும் சீரமைக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க