2.5 கிலோ எடைக்கும் குறைவாகப் பிறக்கும் 80 சதவிகித குழந்தைகள் இறந்துபோகிறார்கள் - ஆய்வில் அதிர்ச்சி | 1 in 7 babies worldwide born with a low birthweight

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/05/2019)

கடைசி தொடர்பு:21:00 (17/05/2019)

2.5 கிலோ எடைக்கும் குறைவாகப் பிறக்கும் 80 சதவிகித குழந்தைகள் இறந்துபோகிறார்கள் - ஆய்வில் அதிர்ச்சி

பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் பிறக்கும், ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை குறைவான எடையுடன் பிறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

குழந்தை

உலகளவில், 2015-ம் ஆண்டில் பிறந்த 2 கோடி குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் அது தெரியவந்ததாக லான்சட் குளோபல் ஹெல்த் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 2.5 கிலோவுக்கும் (5.5 பவுண்டுகள்) குறைவான எடை கொண்ட குழந்தைகள் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பிறப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதுமுள்ள 148 நாடுகளில் 2015-ம் ஆண்டில் மட்டும் 15 சதவிகித குழந்தைகள் குறைவான எடையுடன் பிறந்துள்ளன. இதில் ஸ்வீடனில் 2.4 சதவிகிதம், வங்கதேசத்தில் 28 சதவிகித குழந்தைகள் எடைக் குறைவாகப் பிறந்துள்ளன.

சர்க்கரை நோய்

கீழமை சஹாரா ஆப்பிரிக்காவில் 2000 - 2015-ம் ஆண்டில் மட்டும் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது 44 லட்சத்திலிருந்து 50 லட்சமாக அதிகரித்துள்ளது. தெற்கு ஆசியாவில் 2015-ம் ஆண்டில் மட்டும் 98 லட்சம் குழந்தைகள் இதே போன்று குறைவான எடையுடன் பிறந்துள்ளன. இது உலகளவில் குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் கால்பகுதியாகும். இந்த ஆய்வில் ஓர் அதிர்ச்சியான தகவலும் உண்டு. அதாவது, உலகளவில் ஒவ்வொரு வருடமும் 2.5 கிலோ எடைக்கும் குறைவாகப் பிறக்கும் 80 சதவிகித குழந்தைகள் இறந்துபோகிறார்கள் என்பதுதான் அது. 

குறைவான எடை கொண்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, சர்க்கரை நோய், இதய நோய் பிரச்னைகள் ஏற்படலாம். இளவயது கர்ப்பம், தொற்றுநோய்த் தாக்கம், உயர்தர கருவுறுதல் சிகிச்சை, சிசேரியன் போன்றவையும் குறைவான எடை கொண்ட குழந்தைகள் பிறக்கக் காரணமாக இருக்கலாம் என்பது இந்த ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. 

குழந்தை

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பானது 2012-ம் ஆண்டிலிருந்து 2025-ம் ஆண்டுக்குள் குறைவான எடை கொண்ட குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் குறைக்கும் இலக்கை வகுத்துள்ளது.