ஐந்தில் ஒரு இந்தியருக்கு உயர் ரத்தஅழுத்தம் - எச்சரிக்கும் இதய மருத்துவர்கள்! | One in five Indians has hypertension

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (18/05/2019)

கடைசி தொடர்பு:17:00 (18/05/2019)

ஐந்தில் ஒரு இந்தியருக்கு உயர் ரத்தஅழுத்தம் - எச்சரிக்கும் இதய மருத்துவர்கள்!

ந்து இந்தியர்களில் ஒருவருக்கு உயர் ரத்தஅழுத்தப் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயர் ரத்தஅழுத்தம்

இந்திய இதய மருத்துவர்கள் சங்கத்தின் 70-ம் ஆண்டு விழாவில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த உயர் ரத்தஅழுத்தப் பாதிப்பு இப்போது குழந்தைகளையும் பாதிக்கிறது. உலகளவில் பத்து பேரில் நால்வருக்கு, உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே அதுகுறித்த விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். 

``உயர் ரத்த அழுத்தப் பாதிப்புக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், அது மற்ற உடலுறுப்புகளையும் பாதிக்கும். குறிப்பாக, மாரடைப்பு, ரத்தநாள பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை உண்டாக வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மாறிவிட்ட வாழ்க்கைமுறை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவையே உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு உண்டாவதற்கான்ன முக்கியக் காரணிகள். 

உடற்பயிற்சி

நம் வாழ்க்கைமுறையை, உணவுப் பழக்கவழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்வதன் மூலம் மட்டுமே இந்தப் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். உடல் பருமனாக இருப்பவர்கள் உடனடியாக உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும். உயர் ரத்த அழுத்தப் பாதிப்பை குறைப்பதற்கான உணவியல் முறையை அவர்கள் பரிந்துரைப்பார்கள் அதை முறையாகப் பின்பற்ற வேண்டும். அதோடு, உடற்பயிற்சி நிபுணரிடம் கலந்தாலோசித்து வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் மற்றும் தியானம் செய்வதும், அடிக்கடி ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதும் நல்லது'' என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க