கர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா? - மருத்துவர் விளக்கம் | Is umbilical cord wrapped kids' neck when the mother lay down straight?

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (20/05/2019)

கடைசி தொடர்பு:16:45 (20/05/2019)

கர்ப்பிணிகள் மல்லாந்து படுத்தால் குழந்தைக்குப் பிரச்னை ஏற்படுமா? - மருத்துவர் விளக்கம்

`கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக் கூடாது; அப்படிப்படுத்தால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக்கொள்ளும். கர்ப்பிணிகள் ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்றால், எழுந்து உட்கார்ந்துதான் திரும்பிப் படுக்க வேண்டும்' - எல்லா அம்மாக்களுமே இந்த அறிவுரையைக் கடந்துதான் வந்திருப்பார்கள். இந்த அறிவுரையில் எந்தளவுக்கு மருத்துவ உண்மை இருக்கிறது? மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ் விளக்கம் சொல்கிறார். 

கர்ப்பிணிகள்

``கர்ப்பிணிகளுக்கு 7 அல்லது 8-வது மாதத்திலிருந்து தூக்கம் சரியாக இருக்காது. இதில், திரும்பிப் படுக்கும் ஒவ்வொரு முறையும், எழுந்து உட்கார்ந்துதான் படுக்க வேண்டும் என்றால், அது எவ்வளவு கடினம் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். தவிர, இப்படி எழுந்து உட்கார்ந்துதான் திரும்பிப் படுக்க வேண்டுமென்பது மருத்துவத்தின்படி அவசியமே இல்லை. அடுத்து, கர்ப்பிணிகள் 6-வது மாதம் வரைக்கும் ஒருக்களித்து, மல்லாந்து என எப்படி வேண்டுமானாலும் படுக்கலாம்.

ஏனென்றால், அதுவரைக்கும் சிசுவானது ஒரு தண்ணீர் படுக்கையில் செளகர்யமாகப் படுத்துக்கொண்டிருக்கும். ஆனால், 6 மாதம் கழித்து கர்ப்பிணிகள் வலதுபக்கமோ அல்லது இடதுபக்கமோ மட்டும்தான் படுக்க வேண்டும். மல்லாந்து படுக்கும்போது, அம்மாவிடம் இருந்து சிசுவுக்கு ரத்தம் எடுத்துச் செல்கிற ரத்த நாளங்கள் அழுத்தப்படும் ஒழிய, தொப்புள்கொடி சுற்றிக்கொள்ளும் என்பதில் உண்மையில்லை. அதே நேரம், கர்ப்பிணிகள் தூக்கக் கலக்கத்தில் இரண்டு மணி நேரம் மல்லாந்து படுத்துவிட்டால், கருவிலிருக்கிற சிசுவுக்கு ஒன்றும் ஆகாது. ஸோ, ஹேவ் எ ஹேப்பி ஸ்லீப் அம்மாக்களே...'' என்றார் மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ்.