'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்!' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல் | Study reveals that Breastfeeding reduces long-term risk of heart disease in mothers

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (21/05/2019)

கடைசி தொடர்பு:14:38 (21/05/2019)

'தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்!' - பிரான்ஸ் நாட்டின் ஆய்வில் தகவல்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் இதயம் பலம் பெறுவதாக, பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு இதயக் கோளாறுகள் எதுவும்  ஏற்படாது என்பதும் தெரியவந்துள்ளது.

குழந்தை

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, அவர்களது பிரசவத்துக்குப் பிறகு மன அழுத்தங்களைக் குறைப்பதாகவும், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தாது என்றும் ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும், இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்றும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சுத்திகரிக்க உதவும் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்திருந்தன.  சமீபத்தில், பிரான்ஸில் `ஈரோப்பியன் சொசைட்டி ஆஃப் எண்டோகிரினாலஜி' (European society of Endocrinology) சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், தாய்ப்பால் ஊட்டுவது பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகள் சரிசெய்வதற்கான முதன்மைக் காரணி என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கொழுப்புச் சத்து, உடல் எடை போன்றவை சமநிலையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் இதய நோய் வருவதற்கான முக்கியக் காரணியான சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்க புரோலாக்டின் உதவுவது குறிப்பிடத்தக்கது. 

தாய்ப்பால் - குழந்தை

தாய்ப்பால் ஊட்டும் காலம் எவ்வளவு நீடிக்கிறதோ, அந்த அளவுக்கு இதய நோயின் தாக்கங்களைத் தடுக்கமுடியும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இது ஒரு அமைப்பின் ஆய்வு மட்டுமே; இதன் பாதுகாப்பிற்கான அடிப்படைக் காரணங்களை நிலைநாட்டுவதில் தாங்கள் ஆர்வம் காட்டிவருவதாக, ஏதென்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஐரின் லாம்பிரினோடாக்கி குறிப்பிட்டுள்ளார். 

குழந்தை பெற்ற பெண்கள் மட்டுமன்றி மற்ற பெண்களிடமும் புரோலாக்டின் எவ்வாறு ரத்த சர்க்கரையைப் பாதிக்கிறது என்பதற்கான மூலக்கூறுகள்குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விரைவில் முடிவு வெளியாகும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

தாய்ப்பால் கொடுக்க, பெண்கள் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தலாமா என்பது குறித்த மருத்துவ விளக்கத்தை, வீடியோவில் பார்க்க...