`ரோம் நகருக்குப் புறப்பட்டார்; சென்றது ஜெர்மன் ரோம்!'- சேட்டிலைட் மேப்பை நம்பி பயணித்தவருக்கு நடந்த அதிர்ச்சி! | Older man travels by believing Satellite map app met with a accident

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (29/05/2019)

கடைசி தொடர்பு:10:15 (30/05/2019)

`ரோம் நகருக்குப் புறப்பட்டார்; சென்றது ஜெர்மன் ரோம்!'- சேட்டிலைட் மேப்பை நம்பி பயணித்தவருக்கு நடந்த அதிர்ச்சி!

`ரோம் நகருக்குப் புறப்பட்டார்; சென்றது ஜெர்மன் ரோம்!'- சேட்டிலைட் மேப்பை நம்பி பயணித்தவருக்கு நடந்த அதிர்ச்சி!

துரைக்கு வழி வாயில’ என்பது பழமொழி. அதாவது, மதுரைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்றால், ‘வாயால்’ கேட்டுத்தான் போகணும் என்பதே இதன் அர்த்தம். ஆனால், இப்போது நாம் யாரிடமும் வழி கேட்பதில்லை. கூகுள் மேப்பைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் கூகுள் மேப் நேவிகேஷன் சிஸ்டம் சரியான முறையில் வழிகாட்டினாலும், சில நேரங்களில் முட்டுச்சந்துக்கு அழைத்துச்சென்று நிறுத்திவிடும். பலருக்கும் இதுபோன்ற அனுபவம் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும். இதுபோன்றே, சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டத்தைக் கண்மூடித்தனமாக நம்பியதால், இங்கிலாந்திலிருந்து இத்தாலி நாட்டில் உள்ள ரோமுக்குச் செல்ல வேண்டியவர், ஜெர்மன் நாட்டில் உள்ள குக்கிராமத்துக்குச் சென்று சேர்ந்த சம்பவம் நடந்திருக்கிறது.

மேப் நேவிகேஷனால் ஏற்பட்ட விபத்து

image courtesy : news.sky.com

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், லுகி ரிமோண்டி. 81 வயதான இந்த முதியவர், இங்கிலாந்தில் நியூகேஸ்ட்ல் நகரத்திலிலிருந்து இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமுக்குச் சென்று போப்பை தரிசிக்க தனது கார் மூலம் பயணப்பட்டார். தனியாகப் பயணித்த லுகி, யாருடைய உதவியையும் கேட்காமல், கண்மூடித்தனமாக சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டத்தில் சுட்டிக்காட்டிய குறுக்கு வழியில் செல்லலானார். தொடர்ந்து பயணித்தபோது, ‘தாங்கள் பயணித்த இலக்கு வந்துவிட்டது’என்று நேவிகேஷன் சிஸ்டம் தெரிவித்தது. இதைக் கேட்ட லுகிக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. ஏனெனில், அப்போது அவர் நின்றது ஆள் அரவமற்ற ஒரு சிறிய கிராமத்தில். அந்த கிராமத்தின் பெயரும் ரோம்தான், ஜெர்மன் நாட்டில் இருக்கிறது அது. 

சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டத்தை மட்டுமே நம்பியதால், இத்தாலி தலைநகர் ரோமுக்குச் செல்லவேண்டியவர், வழி தவறி 67 பேர் மட்டுமே வசிக்கும் ஆள் அரவமற்ற ஜெர்மன் நாட்டின் கிராமத்துக்கு வந்துவிட்டதை உணர்ந்தார். 

முதியவர்

பிரச்னை அதோடு முடியவில்லை.  குழப்பத்தில் இருந்து மீளாமல், கார் கண்ணாடியைத் திறந்து தெருவில் சென்ற ஒருவரிடம் விசாரித்தார். அவர் பதில் கூறிக்கொண்டிருந்தபோதே, கார் பின்னோக்கி சரிவில் நகரத் தொடங்கியது. ஹேண்ட் பிரேக்போட மறந்திருந்தார். அதனால், கார் பள்ளத்தை நோக்கிச் சரிந்துசென்றது. காரை கட்டுப்படுத்த முடியாமல் காரிலிருந்து கீழே குதித்து உயிரை காப்பாற்றிக்கொண்டார். லேசான காயத்துடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். அவர் சென்ற காரும் சேதமடைந்தது.

இதில் சுவாரஸ்சியம் என்னவென்றால், பள்ளத்தை நோக்கி சரிந்துவந்த கார், மோதி நின்றது ‘ரோம்’ என்ற கிராமத்தின் பெயர்ப் பலகையில்தான். மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் லுகி, "எனது கார் சரியானதும், மீண்டும் பயணம்செய்து ரோமில் போப்பைத் தரிசிப்பேன்" என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

சேட்டிலைட் நேவிகேஷன் சொதப்பல் எனக்கும் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி பயணித்தபோது, ராணுவ முகாமிற்குள் சென்றுவிட்ட சம்பவம் எனக்கு நிகழ்ந்திருக்கிறது. துப்பாக்கியுடன் சூழ்ந்த ராணுவ வீரர்கள் இரண்டு மணி நேரம் விசாரித்த பிறகே என்னை அனுப்பிவைத்தார்கள். 

உங்களுக்கும் இதுபோன்ற சுவாரஸ்யமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்... அதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க