பள்ளிகள் திறப்பு... குழந்தைகள் அச்சம் போக்க மருத்துவர் சொல்லும் அறிவுரை! | Tips for Parents who send their children to new school

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (01/06/2019)

கடைசி தொடர்பு:20:22 (01/06/2019)

பள்ளிகள் திறப்பு... குழந்தைகள் அச்சம் போக்க மருத்துவர் சொல்லும் அறிவுரை!

பெற்றோர்கள் குழந்தையைத் திட்டாமல் அன்றைய தினத்தில் நடந்த நேர்மறையான விஷயங்களைக் கேட்டறியலாம். 

கோடை விடுமுறை முடிந்து, இன்னும் சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நீண்ட விடுமுறைக்குப் பின், பள்ளி செல்கிறோம் என்ற உற்சாகம் ஒருபுறமிருந்தாலும் மற்றொருபுறமும் ஒருவித பீதியுடன் காணப்படுவார்கள் பள்ளிக் குழந்தைகள். புதிய வகுப்பு, புதிய பாடம், புதுப்புது நண்பர்கள் என எல்லாவற்றின்மீதும் அச்சமிருக்கும். இன்னும் சில குழந்தைகள் பெற்றோரின் பணி மாறுதல் மற்றும் பல காரணங்களால் பள்ளிக்கூடம் மாறியிருப்பார்கள். அதுபோன்ற குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் மீதான பயமும் அதிகமிருக்கும். 

பள்ளி

பள்ளிக் குழந்தைகளின் இதுபோன்ற பயம் அனைத்தையும்  எப்படிப் போக்குவது, அவர்களிடம் உற்சாகத்தை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டியிடம் கேட்டோம்.

"குழந்தைகள்ட்ட நெகட்டிவான விஷயங்களைப் பத்தி பேசக் கூடாது. என்ன ஆனாலும், அதிலிருந்து பாசிட்டிவா ஏதாவது ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சு அதுபத்திப் பேசணும். முதல்ல சில நாள்கள்ல, பள்ளி நண்பர்களோட ஏதாச்சும் சண்டை வந்தா குழந்தை அடம்பிடிக்கலாம், அழலாம். இதனால சிலர் பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்றது, சாப்பாட்டை சரியா சாப்பிடாம மீதி வைக்கிறதுனு இருக்கலாம். இந்தமாதிரி நேரங்கள்ல பெற்றோர் குழந்தைகளைத் திட்டக்கூடாது. அந்த நாள்ல நடந்த நேர்மறையான விஷயங்களைப் பத்தி கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். 

பள்ளி செல்லும் குழந்தைகள்

`உங்க தமிழாசிரியர் உன்னைப் பாராட்டுனாரா, இன்னைக்கு உனக்கு புது ஃப்ரெண்ட் யாராவது கிடைச்சாங்களா, இன்னைக்கு நீ புதுசா என்ன கத்துக்கிட்ட?'னு கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். இந்த மாதிரி கேட்டு அவங்களுக்குள்ள உற்சாகத்தை அதிகமாக்குங்க. தினமும் இது மாதிரி பேசுங்க. நல்லா படிக்கணும் ஹோம் வொர்க் பண்ணு, நிறைய மார்க் வாங்கணும்னு அவங்களை நெருக்காதீங்க.

ஸ்கூல் மாறியிருந்தா, பள்ளி திறக்குறதுக்கு முன்னாடியே குழந்தையைக் கூட்டிட்டுப்போய் பள்ளிக்கூடத்தைச் சுத்திக் காட்டுங்க. ஸ்கூல்ல நீ மட்டும் புதுசா சேர்ந்ததா நினைக்கிறியா... இந்த வருஷம் உன்னை மாதிரியே நிறைய பேர் புதுசா சேர்ந்திருக்காங்கன்னு சொல்லுங்க. நானும் சின்னபிள்ளையா இருக்கும்போது நிறைய ஸ்கூல் மாறியிருக்கேன். இதெல்லாம் சாதாரணம். இதை பெரிசா எடுக்கக் கூடாதுன்னு சொல்லி கொடுக்கணும்" என்றார்.

மருத்துவரின் பேட்டியை, வீடியோ வடிவில் இங்கே காணலாம்...

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க