உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் அவசியம் இடம்பெறவேண்டிய ஆரோக்கிய உணவுகள்! #VikatanQuiz | Simple Foods To Have In Your Children's Lunch Box!

வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (02/06/2019)

கடைசி தொடர்பு:12:03 (02/06/2019)

உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் அவசியம் இடம்பெறவேண்டிய ஆரோக்கிய உணவுகள்! #VikatanQuiz

பள்ளி செல்லும் பல குழந்தைகள் உண்ணும் உணவில் போதுமான அளவு சத்துகள் இல்லாததால் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர். எனவே, பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் சத்தான இயற்கை உணவுகள் இடம்பெறச் செய்தால் நிச்சயம் அவர்களது உடல் நலம் சீராகும்

உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் அவசியம் இடம்பெறவேண்டிய ஆரோக்கிய உணவுகள்! #VikatanQuiz

ழங்கள், காய்கறிகள் மற்றும் சிறுதானிய உணவுகளில் உயிர்ச் சத்துகள் நிறைந்துள்ளன. பொதுவாக சமைக்காத உணவுகளை உண்பதால், அவற்றிலுள்ள உயிர்ச் சத்துகளை முழுமையாக உடல் ஏற்றுக்கொள்ளும். அத்துடன் அவை மருந்தாக மாற்றம் பெற்று பல்வேறு நோய்களைப் போக்கவும் பயன்படும். கழிவுகள் தேங்குவதாலேயே நோய் உண்டாகிறது. இயற்கை உணவுகளை உண்பதால், உடலில் கழிவுகள் தேங்காமல் முற்றிலும் நீக்கப்படுவதுடன் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

லஞ்ச்


உமிழ்நீர் உயிர்நீர் எனப்படும். இயற்கை உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் சேர்த்துச் சாப்பிடுவதால் அவை மிக எளிதாகச் செரிமானமாகும். உணவுக்கும், குணத்துக்கும் நெருங்கிய நேரடி தொடர்பு உண்டு. இயற்கை உணவுகளால் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி மனமும் அமைதி பெறும்; செயல்களில் நிதானம் கைகூடும். அதிக சத்துகள் கொண்ட இயற்கை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதால், அவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிப்பதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கத் துணைபுரியும்.`பள்ளி செல்லும் பல குழந்தைகள் உண்ணும் உணவில் போதுமான அளவு சத்துகள் இல்லாததால் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர். எனவே, பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் சத்தான இயற்கை உணவுகள் இடம்பெறச் செய்தால் நிச்சயம் அவர்களது உடல் நலம் சீராகும். அத்துடன் பல்வேறு குறைபாடுகள் நீங்கி மூளை வளர்ச்சி அடைவார்கள்' என்கிறார், இயற்கை மற்றும் யோகா மருத்துவ நிபுணர் எஸ்.இந்திராதேவி. அவர் சொல்லும் எளிய இயற்கை உணவுகள் பற்றிப் பார்ப்போம்.

1. முளைகட்டிய தானியக் கலவை

முளைக்கட்டிய தானிய கலவை

தேவையானவை:
பச்சைப் பயறு - 50 கிராம், நிலக்கடலை - 25 கிராம், தயிர் - இரண்டு டீஸ்பூன்.

செய்முறை:
பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஊறவைத்து, ஒரு நாள் முழுவதும் முளைகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கி, முளைகட்டிய கலவையுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் தூவவேண்டும். இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும். அதன்மீது பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை தூவி குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பலாம்.   

சத்துகள்:
வைட்டமின் - பி1, புரதச்சத்து, மாங்கனீஸ், துத்தநாகம்.

பயன்கள்:
குடல் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்; புரதச்சத்து நிறைந்த இந்த உணவு அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது; குழந்தைகளை உற்சாகமாக வைக்கும். உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கும் இது உகந்தது. 

2. கேரட் - நிலக்கடலை கலவை

கேரட் - நிலக்கடலை கலவை

தேவையானவை:
கேரட் - 200 கிராம், நிலக்கடலை - 30 கிராம், இஞ்சி, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

செய்முறை:
நிலக்கடலையை எட்டு மணிநேரம் நீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். கேரட்டை சுத்தமான நீரில் கழுவி துருவவேண்டும். இஞ்சி, தேங்காய்த் துருவலை கேரட் மற்றும் ஊறவைத்த நிலக்கடலையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும். பிறகு அதன்மீது அரை எலுமிச்சம்பழத்தின் சாற்றைப் பிழிந்துவிட்டு, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம்.

சத்துகள்:
பி-கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் சி,ஈ,கே மற்றும் பாஸ்பரஸ்.

பயன்கள்:
கண் பார்வைக்கு உகந்தது; பகுத்தறியும் தன்மை, ஞாபகசக்தியை அதிகரிக்கும்; புத்திக் கூர்மையாக்கும்; சரும நோய்களைக் குணப்படுத்தும்.

3. மாதுளை - தயிர் பச்சடி

மாதுளை - தயிர் பச்சடி

தேவையானவை:
உரித்த மாதுளை - 50 கிராம் (ஒரு கப்), தயிர் - 30 கிராம் (ஒரு கப்), வெல்லம் - இரண்டு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
ஒரு கப் மாதுளை மற்றும் ஒரு கப் தயிர் எடுத்துக்கொள்ளவேண்டும். மாதுளையில் தயிர் விட்டு நன்றாகக் கலக்கவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் வெல்லம் சேர்த்து, கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவேண்டும். அதன்பிறகு நறுக்கிய கொத்தமல்லியைத் தூவினால் மாதுளை - தயிர் பச்சடி தயார். இதைக் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம்.

சத்துகள்:
வைட்டமின் ஏ,சி, ஃபோலிக் ஆசிட், புரோபயாடிக்ஸ், இரும்புச்சத்து.

பயன்கள்:
உடல் உபாதைகளை நீக்கும்; சரும நோய்க்கு உகந்தது; சருமத்தைப் பொலிவாக்கும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

4. வெண் பூசணி - தயிர்சாதம்

வெண் பூசணி - தயிர்சாதம்

தேவையானவை:
நறுக்கிய வெண்பூசணி - 200 கிராம், தயிர் - 100 கிராம் (ஒரு கப்),

செய்முறை:
வெண் பூசணியின் தோலைச் சீவிவிட்டு, பொடிப் பொடியாக நறுக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கப் தயிர் சேர்ப்பதுடன் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த கலவையைச் சேர்க்கவேண்டும். இறுதியாக, கொத்தமல்லி இலையைத் தூவி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்.

சத்துகள்:
கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி,டி, இரும்புச்சத்து.

பயன்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும்; மலச்சிக்கலை நீக்கும்; மாணவர்களுக்கு உடல்சோர்வு, மனச்சோர்வு நீக்கி உற்சாகத்தைத் தரும்.

5. உலர் திராட்சை - பருப்பு லட்டு

உலர் திராட்சை - பருப்பு லட்டு

தேவையானவை:
பாதாம், உலர் திராட்சை, பேரீச்சை  - தலா 50 கிராம், முந்திரி, வால்நட் -  25 கிராம், ஏலக்காய் - 10, துருவிய தேங்காய் - 30 கிராம்.

செய்முறை:
பாதாம், உலர் திராட்சை, பேரீச்சை, முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்றவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவேண்டும். அதில் துருவிய தேங்காயைச் சிறிது சேர்த்து, உருண்டைபோல பிடித்து லஞ்ச் பாக்ஸில் வைக்கலாம். 

சத்துகள்:
டிஹெச்ஏ (ஒமேகா ஃபேட்டி ஆசிட்), வைட்டமின் இ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகம்.

பயன்கள்:
பள்ளி செல்லும் குழந்தைகள் கண் கண்ணாடி அணிவதைத் தவிர்க்கலாம்; ரத்தச்சோகையைக் குணமாக்கும்; செரிமான சக்தியை அதிகரிக்கும்; துரித உணவு மீதான நாட்டத்தைக் கட்டுப்படுத்தும்; எலும்புகளை வலுப்படுத்தும்; ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்கும்.

6. இஞ்சி தேன் ஊறல்

இஞ்சி தேன் ஊறல்

தேவையானவை:
தோல் நீக்கிய இஞ்சி - 100 கிராம் (ஒரு வாரத்துக்கானது), தேன் - 250 மி.லி.

செய்முறை:
தோல் நீக்கிய இஞ்சியை நறுக்கிக்கொள்ளவேண்டும். இதை ஒரு கப் தேனில் போட்டு ஊறவைக்கவேண்டும். ஒரு நாள் கழித்து, ஒரு டேபிள் ஸ்பூன் குழந்தைகளுக்கு உண்ணக்கொடுக்கலாம்.

சத்துகள்:
புரதச்சத்து

பயன்கள்:
வயிறு உப்புசம்,  சுவாசப் பிரச்னைகளுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுடன் புற்றுநோய் பரவாமலிருக்க உதவும்; செரிமானத்தை மேம்படுத்தும்; அழற்சி எதிர்ப்பாகச் செயல்படுகிறது; செரிமானக் கோளாறுகளுக்கு உதவும்; இருமல், சளி, தொண்டைவலி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

7. எலுமிச்சை அவல்

எலுமிச்சை அவல்

தேவையானவை:
அவல் - 150 கிராம் (ஒரு குழந்தைக்கு ஒரு வேளைக்கு), எலுமிச்சைப் பழம் - பாதி, கடுகு - அரை டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - இரண்டு, மஞ்சள் - இரண்டு சிட்டிகை.

செய்முறை:
அவலை பத்து நிமிடம் ஊறவைத்து, எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்மீது எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்துவிடவேண்டும். கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் சேர்த்துத் தாளித்த கலவையை அவலுடன் சேர்த்து கலந்தால் எலுமிச்சை அவல் ரெடி. இதைக் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் இடம்பெறச் செய்யலாம்.

சத்துகள்:
இரும்புச்சத்து, நார்ச்சத்து, குறைந்த கலோரி.

பயன்கள்:
ரத்தச்சோகையைக் குணப்படுத்தும்; எளிதாகச் செரிமானமாகும்; ஹீமோகுளோபின் அளவைச் சீராக்கும்; குழந்தைகளுக்குப் பித்தத்தை சமப்படுத்தி சுறுசுறுப்பைத் தரும்.

8. கம்பு லட்டு

கம்பு லட்டு

தேவையானவை: (எட்டு லட்டுக்கானது)

கோதுமை, மக்காச்சோளம், கம்பு - 100 கிராம், ஒரு நாள் முளைகட்டிய கேழ்வரகு - 10 கிராம், வரகு - 20 கிராம், தினை - 20 கிராம், சாமை - 20 கிராம், குதிரைவாலி - 20 கிராம், நாட்டுச் சர்க்கரை - 40 கிராம், ஏலக்காய் - 10.

செய்முறை:
மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்றவற்றை வறுத்து, தேவையான அளவு ஏலக்காய்ச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். இதில் நாட்டுச் சர்க்கரை, கொஞ்சம் வெந்நீர் சேர்த்து உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தால் கம்பு லட்டு தயார். இதில் ஒரு லட்டை லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்.

சத்துகள்:
கால்சியம், புரதம், மக்னீசியம், இரும்பு,பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து.

பயன்கள்:
பற்களுக்கு உறுதி தரும்; சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்; உடல் எடையைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் போக்கும்; குழந்தைகளுக்கு ஆற்றல் தந்து உற்சாகமாக வைக்க உதவும்; எலும்பு வளர்ச்சிக்கு உதவும்; இதய நோய்களைக் குணப்படுத்தும். 

9. இளநீர் பாயசம்

இளநீர் பாயசம்

தேவையானவை:
நன்றாகக் காய்ச்சிய பால் - 250 மி.லி., இளநீர் வழுக்கை - 50 கிராம், இளநீர் - ஒன்று, முந்திரி, திராட்சை - 25 கிராம்.

செய்முறை:
பாலை நன்றாகக் காய்ச்சி, ஆறவைத்துக் கொள்ளுங்கள். வெல்லம், ஏலக்காயைப் பொடியாக்கி ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவேண்டும். பிறகு இளநீர் மற்றும் அதன் வழுக்கையை மிக்ஸியில் அரைக்கவேண்டும். பசை போன்ற நிலையில் உள்ள இந்தக் கலவையுடன் ஆற வைத்த பாலைச் சேர்க்கவும். அதன்மீது முந்திரி, திராட்சையைச் சேர்த்தால் இளநீர் பாயசம் தயார். இதைக் குழந்தைகளுக்கு அருந்தக்கொடுக்கலாம்.

சத்துகள்:
புரதம், வைட்டமின் சி, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து.

பயன்கள்:
வயிற்று உபாதைகளைப் போக்கும்; மூளைச் செயல்பாடு, ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமப் பாதுகாப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. 
குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். இந்தப் பானம் குழந்தைகளுக்கு ஆற்றல் தரும் பானமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

10. நிலக்கடலை லட்டு (நான்கு லட்டுக்கானது)

 நிலக்கடலை லட்டு

தேவையானவை:
நிலக்கடலை - 200 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் - 10, நெய் - நான்கு டேபிள் ஸ்பூன்,

செய்முறை:
நிலக்கடலையை வறுத்து, தோல் நீக்கவேண்டும். இதில் சிறிது வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கும்போது சிறிது ஏலக்காய் சேர்க்கவேண்டும். அரைத்து முடித்ததும் நெய் சேர்த்து லட்டுவடிவில் உருட்டவேண்டும். குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் ஒரு லட்டை வைத்து உண்ணக் கொடுக்கலாம்.

சத்துகள்:
புரதச்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம், வைட்டமின் இ.

பயன்கள்:
ரத்த சுழற்சியை அதிகரிக்கும்; உடலிலுள்ள நச்சுப் பொருள்களை நீக்கும்; மலச்சிக்கலைப் போக்கும்; ரத்தச்சோகையைக் குணப்படுத்தும்; பற்கள் மற்றும் எலும்புகளை வலிமைப்படுத்த உதவும்; மாதவிடாய்ப் பிரச்னைகளை நீக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கும். 

11. பழங்கள் கலவை (ஒரு குழந்தைக்கு ஒரு வேளைக்கு)

பழங்கள் கலவை

தேவையானவை:
வாழைப்பழம், ஆப்பிள், அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, மாதுளை, திராட்சை, பைனாப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு அனைத்தும் சேர்த்து 75 கிராம் எடுத்துக்கொள்ளவேண்டும்.இந்திரா தேவி

செய்முறை:
அனைத்துப் பழங்களையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி லஞ்ச் பாக்ஸில் வைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.

சத்துகள்:
பொட்டாசியம், வைட்டமின்-சி, செரட்டோனின், மாங்கனீஸ், நார்ச்சத்து.

பயன்கள்:
வாழைப்பழம் குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிப்பதுடன் அதிக மதிப்பெண் பெற உதவும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்; ரத்த சுழற்சியைச் சீராக்கும்; மூளைச் செயல்பாட்டை அதிகரிக்கும்; குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும்.
குழந்தைகள் அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, பள்ளி செல்லும் குழந்தைகளின் சோர்வு நீக்கிச் சுறுசுறுப்பைத் தரும். ஆனால், உடல் எடையை அதிகரிக்காது.

loading...

 


டிரெண்டிங் @ விகடன்