காக்ரோச் சேலஞ்சைத் தொடர்ந்து அச்சுறுத்தும் `வேக்வம் சேலஞ்ச்' - எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Story about Internet's latest vacuum challenge

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (04/06/2019)

கடைசி தொடர்பு:19:00 (04/06/2019)

காக்ரோச் சேலஞ்சைத் தொடர்ந்து அச்சுறுத்தும் `வேக்வம் சேலஞ்ச்' - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

வ்வப்போது வித்தியாசமாக எதையேனும் செய்து சேலஞ்ச் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரபரப்பு கிளப்புவது வழக்கமாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணையத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது `வேக்வம் சேலஞ்ச்'.

காக்ரோச்

ஒரு பெரிய பிளாஸ்டிக் பைக்குள் ஒருவர் அமர்ந்துகொள்கிறார். மற்றொருவர், வேக்வம் கிளீனரின் பைப்பை அந்த பிளாஸ்டிக் பைக்குள் திணித்து அதை ஆன் செய்ய, சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் நபரின் உடலை பிளாஸ்டிக் பை இறுக்குகிறது. இதுதான் வேக்வம் சேலஞ்ச். இதற்கு  `ட்ராஸ் பேக் சேலஞ்ச்' (Trash Bag Challeng), பின் பேக் சேலஞ்ச் (Bin bag challenge) என்ற பெயர்களிலும் இது பிரபலமாகி வருகிறது. மிகவும் ஆபத்தான இந்த சவாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்து வருகிறார்கள். 

வேக்வம் சேலஞ்ச்

ஏற்கெனவே, கை, கால்களைக் கிழித்துக்கொள்ளும் `ப்ளூ வேல் சேலஞ்ச்', ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடும் `கிகி சேலஞ்ச் , முகத்தில் கரப்பான் பூச்சியை ஓடவிட்டு, `காக்ரோச் சேலஞ்ச்' என உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் `சேலஞ்ச்' வரிசையில் தற்போது இந்த வேக்வம் சேலஞ்ச் இணைந்திருக்கிறது. உடலை இறுக்கும் இந்தக் கொடூர சவாலுக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. `இது போன்ற அபாயகரமான விஷயங்களை யாரும் முயற்சிசெய்ய வேண்டாம்' எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க