கருவிலேயே இரட்டையருக்கு மரபணு மாற்றம்... அடுத்தகட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! | Gene Edited Babies are More Likely to Die Early

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/06/2019)

கடைசி தொடர்பு:22:00 (04/06/2019)

கருவிலேயே இரட்டையருக்கு மரபணு மாற்றம்... அடுத்தகட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

கடந்த பிப்ரவரி மாதம் செய்யப்பட்ட ஆய்வில், அந்த இரட்டைக் குழந்தைகள் `சூப்பர் வுமன்' ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவித்தன.

ருவிலிருந்த இரட்டையர்களின் மரபணுவில், சீனாவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர் ஒருவர் சில மாற்றங்களைச் செய்திருந்தார். உலகம் முழுவதும் மரபணு மாற்றம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கருவிலேயே செய்யப்பட்ட இந்த மாற்றத்துக்கு எதிர்ப்புக் குரல்கள் எழத்தொடங்கின. கடந்த வருடம் நடைபெற்ற இந்த ஆய்வில், உலக சுகாதார அமைப்பு தலையிட்டு அந்த ஆய்வாளரை எச்சரித்தது. மேலும், உலகளவில் மரபணு மாற்றத்துக்கான தனித்துறை விரைவில் அமைக்கப்படும் என்றும், அதற்கான வரைமுறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தது.

மரபணு மாற்றம்

இதற்கிடையே உலகில் முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட அந்த இரட்டையருக்கு என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதுகுறித்து பல்வேறு தரப்பு மருத்துவச் செயற்பாட்டாளர்கள் விவாதித்து வருகின்றனர். அதுகுறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் செய்யப்பட்ட ஆய்வில், அந்த இரட்டைக் குழந்தைகள் `சூப்பர் வுமன்' ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால், `நேச்சர் மெடிசின்' (Nature Medicine) என்ற மருத்துவப் பத்திரிகை நிறுவனம் தற்போது நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அந்த இரட்டைக் குழந்தைகள் முன்கூட்டியே இறக்க 21 சதவிகித வாய்ப்பு உள்ளது என்பதே அந்த அதிர்ச்சிச் செய்தி. 

சீன இரட்டையர்கள்

அனுமதி பெறாமல் சிசுக்களுக்கு மரபணுவை மாற்றியமைத்த ஆய்வாளர் ஹி ஜியான்கு இதுகுறித்து கூறும்போது, "கருவைச் சுமந்து வந்த பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்ததால், குழந்தைக்கும் அது பாதிக்க வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரிந்தது. எனவே, அதைத் தடுப்பதற்காகத்தான் ஹெச்.ஐ.வி-க்குக் காரணமான மரபணுவை மாற்றியமைத்தேன். இப்போது சிசு ஹெச்.ஐ.வி தொற்றில்லாமல் இருக்கும். அதன் வாழ்நாளும் அதிகரிக்கும்" என மரபணு மாற்றத்துக்கான காரணம் குறித்துத் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்த சமீபத்திய அப்டேட்டில், ஏதோவொரு வகையில் இரட்டையரின் உயிரை சில காலம் நீடித்திருப்பதாகச் சமூக வலைதளத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க