உடல் எடை குறைக்கும், மூட்டுவலி குணமாகும்... தோப்புக்கரணம் தரும் அரிய பலன்கள்! | Thoppukaranam aka Super Brain Yoga has enabled people to achieve mental, physical and spiritual well-being

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (07/06/2019)

கடைசி தொடர்பு:15:20 (07/06/2019)

உடல் எடை குறைக்கும், மூட்டுவலி குணமாகும்... தோப்புக்கரணம் தரும் அரிய பலன்கள்!

தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக்கொள்வதால் முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் நம் உடலில் தூண்டப்படுகின்றன. இரண்டு கால்களுக்கும் சற்று இடைவெளிவிட்டு நிமிர்ந்து நின்று, இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்து உட்கார்ந்து எழுவதே தோப்புக்கரணம்.

உடல் எடை குறைக்கும், மூட்டுவலி குணமாகும்... தோப்புக்கரணம் தரும் அரிய பலன்கள்!

`வீட்டுப்பாடம் செய்யாதவங்கல்லாம் தோப்புக்கரணம் போடு...'அந்தக்கால பள்ளிகளில் ஆசிரியர்கள் தருகிற அதிகபட்ச தண்டனை இதுதான். பிள்ளையாரை வழிபடுபவர்களும் தோப்புக்கரணம் போடுவார்கள். ஒருகாலத்தில் தோப்புக்கரணம் என்பது நம் வாழ்வியல் செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தது. இன்று, பள்ளிச்சூழல் மாறிவிட்டதால் தோப்புக்கரணத் தண்டனை வழங்கொழிந்துவிட்டது.  தண்டனையாகவோ, பிரார்த்தனை செய்வதற்காகவோ நம் முன்னோர் கற்றுக்கொடுத்த இந்த `தோப்புக்கரணம்' ஒரு மிகப்பெரிய `அக்குபஞ்சர்' சிகிச்சை முறை என்பதும், உடல் உறுப்புகளைத் தூண்டி சிந்தனையைச் செழுமைப்படுத்தக்கூடியது என்பதும் பலர் அறியாதது. வெளிநாடுகளில் `சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற பெயரில் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது.

தோப்புக்கரணம்

தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக்கொள்வதால் முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் நம் உடலில் தூண்டப்படுகின்றன. இரண்டு கால்களுக்கும் சற்று இடைவெளிவிட்டு நிமிர்ந்து நின்று, இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்து உட்கார்ந்து எழுவதே தோப்புக்கரணம். இடது கையால் வலது காதுமடலையும், வலது கையால் இடது காதுமடலையும் பிடிக்கவேண்டும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கமும் இருக்குமாறு இரண்டுவிரலால் பிடிக்கவேண்டும். (வலது கை, இடது கையின் மேல் இருக்கவேண்டும்). முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு, நேராகப் பார்த்தபடி மூச்சுக் காற்றை மெதுவாகவும், சீராகவும் விட்டபடி உட்கார்ந்து எழவேண்டும். அதிகம் சிரமப்படாமல் முடிந்தஅளவு உட்கார்ந்துகொண்டு மூச்சை இழுத்தபடி பொறுமையாக எழவேண்டும். இப்படி உட்கார்ந்து எழும்போது மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன.

வலி

தோப்புக்கரணத்தின் பலன்கள் மிகவும் அற்புதமானவை. தரையில் அமர்ந்து எழுந்திருப்பதால், நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுள் கூடும். தரையில் உட்கார்ந்து எழும்போது ரத்த ஓட்டம் இதயத்தில் சீராக இருப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் உடலின் அனைத்துப் பாகங்களும் பலனடையும். தரையில் அமர்வதால் முழங்கால் மூட்டு மற்றும் இடுப்பெலும்புகள் வலுவடையும். அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால், இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். தசைகள் வலுவடையும். உடல் எடை குறைந்து மூட்டுவலி இருந்த இடம் தெரியாமல் போகும். வயிற்றுத் தசைகளை வலிமைப்படுத்தும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், `சியாட்டிகா' எனப்படும் இடுப்புச் சந்து வாதம் உள்ளவர்களுக்கும் இந்தத் தோப்புக்கரணம் பயனளிக்கும். இடுப்பு மற்றும் மூட்டுகள் வலுவடைந்து தசைப்பிடிப்பு, மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவை விலகும். முக்கியமாக, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக வெளியற்றப்படும்.

உடல் பருமன்

மலச்சிக்கல் அகலும். இந்தப் பயிற்சியை நாம் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஜிம்முக்குப் போக வேண்டாம்; உபகரணங்கள் வாங்கவேண்டாம். ஆரம்பக் காலகட்டங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை 15-20 முறை தோப்புக்கரணம் போடலாம். வயதானவர்கள் தன்னிச்சையாக நின்ற நிலையில் தோப்புக்கரணம் போடமுடியாது என்பதால், அவர்கள் ஜன்னல் கம்பிகள், மரத்தூண்களைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்கலாம். நீங்கள் தோப்புக்கரணப் பயிற்சியைத் தினந்தோறும் செய்யப் பழகிவிட்டால் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே செய்துவிட வேண்டும். அடிக்கடி காபி, டீ குடிப்பதை நிறுத்தவேண்டும். வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்!

- ஈஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்