`ஏழு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை!’ - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் | 7th person tests negative for Nipah

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/06/2019)

கடைசி தொடர்பு:22:00 (07/06/2019)

`ஏழு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை!’ - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

ழு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நிபா வைரஸ்

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 23 வயதுக் கல்லூரி மாணவர் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார். தற்போது, அவர் எர்ணாகுளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பழகிய 7 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. இந்த 7 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தனி வார்டில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

பரிசோதனை

கல்லூரி மாணவரிடம் பழகிய 7 பேரில் செவிலியர்களும் அடக்கம். இவர்களின் ரத்த மாதிரியானது புனேயிலுள்ள ரத்த பரிசோதனை கூடத்துக்கு அனுப்பிவைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இந்த முடிவு தெரியவந்துள்ளது. மேலும், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நிபா காய்ச்சல் அறிகுறிகள் உடன் வந்த இருவரின் ரத்த மாதிரிகள் புனே ரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார். 

நிபா

இந்நிலையில் `நிபா வைரஸ் பாதிப்புள்ள 316 பேரில் 33 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர்’ என்று கேரள அரசின் முதன்மைச் சுகாதாரச் செயலர் ராஜன் என் கோப்ரகடே தெரிவித்துள்ளார். 


அதிகம் படித்தவை