நின்றுகொண்டே சாப்பிடுபவரா நீங்கள்... மன அழுத்தம், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படலாம்! | Eating While Standing Increases Stress, Mutes Taste Buds - Says research

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (12/06/2019)

கடைசி தொடர்பு:12:45 (12/06/2019)

நின்றுகொண்டே சாப்பிடுபவரா நீங்கள்... மன அழுத்தம், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படலாம்!

`தினமும் நின்றுகொண்டே சாப்பிடுபவர்களுக்கு, நாக்கிலுள்ள சுவை உணர்வுத் திறன் குறையத் தொடங்கலாம்' என்று  ஜர்னல் ஆஃப் கன்ஸ்யூமர் ரிசர்ச் (Journal of Consumer Research) என்ற மருத்துவப் பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நின்றுகொண்டே சாப்பிடுபவரா நீங்கள்... மன அழுத்தம், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படலாம்!

பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி வேலைக்குச் செல்லும் பெரியவர்கள்வரை எல்லோருமே பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். பலருக்குச் சாப்பிடக்கூட நேரமில்லை. நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிடுகிறார்கள். நின்றுகொண்டே சாப்பிடுவது நாளடைவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துவதுடன் செரிமானக் கோளாறு, மனஅழுத்தம் எனப் பல பிரச்னைகளுக்குக் காரணமாகலாம். 

பஃபே முறை

`தினமும் நின்றுகொண்டே சாப்பிடுபவர்களுக்கு, நாக்கிலுள்ள சுவை உணர்வுத் திறன் குறையத் தொடங்கலாம்' என்று  ஜர்னல் ஆஃப் கன்ஸ்யூமர் ரிசர்ச் (Journal of Consumer Research) என்ற மருத்துவப் பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்களில் ஒருவரான திபாயன் பிஸ்வாஸ் (Dipayan Biswas) கூறும்போது, ``ஒருவர் நின்றுகொண்டு சாப்பிடுகிறாரா அல்லது உட்கார்ந்த நிலையில் சாப்பிடுகிறாரா என்பதைப் பொறுத்தே நாக்கின் சுவை உணரும் திறன் அமையும். எங்களது ஆய்வில் குழந்தைகளும் உட்படுத்தப்பட்டனர். சாப்பிடத் தூண்டாத, சுவை குறைவான ஆரோக்கியமான உணவுகளை நின்றுகொண்டு சாப்பிட அவர்களை அனுமதித்தோம். அப்போது அவர்கள், தங்களது உணவை விரைந்து சாப்பிட்டு முடித்துவிடுவது தெரியவந்தது. உட்கார்ந்து சாப்பிடச் சொன்னபோது, சுவையைச் சரியாகக் கண்டறிந்து ஒரு பகுதி உணவை ஒதுக்கி வைக்கின்றனர். நின்றுகொண்டே சாப்பிடுவதால் நாவின் சுவை அறியும் திறன் குறைந்துவிடுகிறது" என்றார். 

சுவை - நின்றுகொண்டே சாப்பிடும் பழக்கம்

இதுகுறித்து பொது நல மருத்துவர் சுந்தர்ராமனிடம் கேட்டோம்.

``மாறிவரும் உணவுப்பழக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்தும் ஏராளமான தகவல்கள், அறிவுரைகள் வெளியாகின்றன. எந்த உணவைச் சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், ஏன் தவிர்க்க வேண்டும் என ஏராளமான அறிவுரைகள் இன்டெர்நெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், உணவுகள் மட்டுமன்றி உண்ணும் முறையும் மாறிவருகின்றன. இன்றைய சூழலில் அலுவலக பார்ட்டிகள், பரபரப்பான சாலைகளிலுள்ள பெரிய தேநீர்க் கடைகள், டைனிங் ஹால்கள் தொடங்கி சில கல்யாண வீடுகளிலும்கூட பஃபே சிஸ்டம் வரத்தொடங்கிவிட்டன. பஃபே என்பது, தாமாகவே உணவு பரிமாறிக்கொண்டு, நின்றுகொண்டே சாப்பிடும் முறை. பஃபேவில், சில நேரங்களில் அமர்வதற்கு இடமிருக்கும். ஆனால், தேநீர்க்கடைகள், பார்ட்டிகளில் அப்படியான இருக்கைகள் இருப்பதில்லை. 

நின்றுகொண்டே சாப்பிடுதல் - உடல் பருமன்

சிலர் காலை உணவை, அவசரகதியில் நின்றுகொண்டே சாப்பிடும் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் சிலரும்கூட கிளம்பும் அவசரத்தில் சாப்பாட்டுத் தட்டை கையில் பிடித்துக்கொண்டு வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு ஸ்கூல் பஸ்சை பிடிக்க ஓடுவார்கள். வேலைக்குச் செல்லும் பல இளைஞர்களிடமும் இந்தப் பழக்கம் உள்ளது. இத்தகைய செய்கைகள், செரிமானக் கோளாறு தொடங்கி மனஅழுத்தம் வரை பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 

பொறுமையாகச் சாப்பிடும்போதுதான், மென்று சாப்பிட முடியும். அப்போதுதான், வாயில் சுரக்கும் டயலின் (Ptyalin) என்ற ஹார்மோன், உணவுடன் நன்றாகக் கலக்கும். செரிமானத்தை எளிதாக்கும். எந்தவொரு உணவின் ஊட்டச்சத்தையும் முழுமையாகப்பெற அதை நன்றாக சுவைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம். நின்றுகொண்டு சாப்பிடுபவர்கள், பெரும்பாலும் பதற்றத்தோடு, வேகவேகமாகத்தான் சாப்பிடுவர். இதனால், ஊட்டச்சத்தும் முழுமையாகவும் முறையாகவும் உட்கிரகிக்கப்படாமல் போகக்கூடும். இது உடலில் வாய்வுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம். நாள்பட்ட பழக்கம் ஊட்டச்சத்து குறைபாட்டைக்கூட ஏற்படுத்தும்.

வயிறு தொடர்பான பிரச்னைகள்

நிதானமாகச் சாப்பிடுவதால், 'ஃபீல் குட் ஹார்மோன்' எனச் சொல்லப்படும் `கிரெலின்' (Ghrelin) ஹார்மோன் உடலில் சுரக்கத் தொடங்கும். பசி அடங்கிவிட்டதென்று சொல்ல, `சடைட்டி' (Satiety) என்கிற ஹார்மோன் சுரக்கும். இவை இரண்டும் போதிய அளவு சுரந்தால்தான், உடல் இயக்கம் சீராக இருக்கும். பசி  உணர்வு அடங்கியதும் சாப்பிடுவதை நிறுத்துமாறு மூளை அறிவுறுத்தும். நின்றுகொண்டே சாப்பிடுபவர்களுக்கு பசி அடங்கிய உணர்வு தாமதமாகத்தான் ஏற்படும். அதுமட்டுமன்றி, மனஅழுத்தம் அதிகரிக்கும் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும். இதனால், அளவுக்கு மீறிய உணவு சாப்பிடும் சூழல் ஏற்படலாம். அவசரம் காரணமாக நின்றுகொண்டு சாப்பிடுகிறார்கள் என்றால், அந்த அழுத்தமும், பதற்றமும் அதிகரித்து ரத்த அழுத்தத்தில் வேறுபாடு ஏற்படத் தொடங்கும். 

சிலர் நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு, வேலை பார்த்துக்கொண்டே ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள். இதுபோன்ற சூழலில் மனம் உணவின்மீது கவனத்தை செலுத்தாது. உணவின் அளவு அதிகரிக்கும். இதனால் செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். அழற்சிப் பிரச்னைகளும் ஏற்படலாம். மற்ற உணவுகளைவிட கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை நின்றுகொண்டே சாப்பிட்டால் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும். முடிந்தவரை, சப்பணம் போட்டு, அமைதியான மனநிலையில் சாப்பிட அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும்" என்கிறார் சுந்தர்ராமன்.

நிற்கும்போது கால்களை நோக்கியே ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் பம்ப் செய்யப்படுவதில் தாமதமாகும். சப்பணம் போட்டால், எல்லா இடங்களுக்கும் ரத்த ஓட்டம் சரிசமமாக செல்லும். இதனால், இதயத்துடிப்பு சீராக இருக்கும். ரத்தம் பம்ப் செய்யப்படுவதில் நிகழும் தாமதம் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோல் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கும். இந்த ஹார்மோனுக்கு, நாவின் சுவைத் திறனுக்கும் தொடர்புள்ளது. இதைத்தான் ஜர்னல் ஆஃப் கன்ஸ்யூமர் ரிசர்ச் (Journal of Consumer Research) ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்