தூங்கும் அறையில் செல்போன் இருந்தால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கலாம்! | Artificial light during sleep linked to weight gain in women, says Study

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (12/06/2019)

கடைசி தொடர்பு:21:20 (12/06/2019)

தூங்கும் அறையில் செல்போன் இருந்தால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கலாம்!

அதிக வெளிச்சத்தில் தூங்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கன் மெடிக்கல் அசோஷியன் செய்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த அந்த ஆய்வில், 35 முதல் 74 வயதுக்குட்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த 44 ஆயிரம் பெண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளனர். தூக்கத்தின்போது, எந்தளவு செயற்கை வெளிச்சத்தை பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தே, அந்த ஆய்வு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. 

வெளிச்சம் - தூக்கம் - பெண்

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர், ஐந்து வருடங்களில் ஐந்து கிலோ வரை எடை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. படுக்கைக்கு மிக அருகில் செல்போன், அதிக வெளிச்சம் கொண்ட கடிகாரம், டி.வி, லேப்டாப், இ-புத்தக கையேடுகள் போன்றவை இருந்தால் உடல் எடை அதிகரிக்க 17 சதவிகித வாய்ப்பு அதிகம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்த உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாக, `வெளிச்சம் அதிகமாக இருந்தால், தூக்கத்தில் சுரக்கும் மெலட்டோனின் ஹார்மோனின் அளவுகள் குறையும். வேறு சில ஹார்மோன்களின் மாற்றங்களும் உடலில் நடக்கும். இவற்றின் காரணமாக தூக்கத்தில் தொந்தரவு ஏற்படும். உடலியக்கம் பாதிக்கப்படும். இவை, உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்' என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

வெளிச்சம் - தூக்கம்

இதற்குச் சிறந்த தீர்வாக, பெண்கள் கண்களில் மாஸ்க் அணிந்துகொண்டு தூங்குவது, தூங்கும் அறையை இருட்டாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள். சந்திரா ஜாக்சன் என்ற ஆய்வாளர், ஆய்வு முடிவு குறித்து கூறும்போது, ``நகர்ப்புறத்தில் வாழும் பெரும்பாலானோர் தூங்கும்போது அவர்கள்மீது விளக்கு வெளிச்சம் பட வாய்ப்பு உள்ளது. எனவே, நகரத்தில் வசிப்பவர்கள், இரவில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்" எனக் கூறி எச்சரித்தும் உள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க